சின்னப்பட முடியலையே
மருமகள் பருத்தி ஆட்டி கொட்டையைப்
பிரிக்க மணையிலுட்காருகிறாள். இந்த வேலை செய்தால், அவள் கையில் கொஞ்சம் காசு
சேரும். இதைக் கண்ட மாமியாருக்குப் பொறுக்கவில்லை.
“வீட்டு வேலை செய்யாமல் வீண் வேலை
செய்கிறாயே
”
என்று திட்டுகிறாள், மருமகள் தன்னுடைய வருத்தத்தை மனதுக்குள்ளேயே சொல்லிக் கொள்ளுகிறாள்.
நாடன்
பருத்திக் கொட்டை
நானாட்ட
முடியலியே
நாதேரி
முண்டகிட்ட
சின்னப்பட
முடியலியே
உக்கம்
பருத்திக் கொட்ட
நானாட்ட
முடியலியே
ஊதேரி முண்டகிட்ட
சின்னப்பட
முடியலியே
உதவியவர்
:
பெருமாயி
சேகரித்தவர்
:
கு.சின்னப்ப பாரதி |
இடம்
:
பொன்னேரிப்பட்டி,
சேலம் மாவட்டம் |
|