இனிக்கும் பாகற்காய்
பாகற்காய் விற்பவள் அதன் கசப்பு ருசியை மாற்ற
இனிப்பான பாடலொன்றைப் பாடுகிறாள்.
ஒரு கொடியை தூக்க தூக்க
ஓராயிரம் பாவக்காய்
சட்டியிலிட்டப் பாவக்காய்
சட்டி தாளிச்சப் பாவக்காய்
அரிக்கப் பொரிக்கச் சொல்லி
அய்யன் தின்ன பாவக்காய்
அப்பிடியாக் கொத்த பாவக்காய்
அஞ்சு பணத்துக்கு மாத்துலாம்
வட்டார வழக்கு:
பாவக்காய்-பாகற்காய்;அப்படியாக்கொத்த-அப்படிப்பட்ட;மாத்துலாம்-குறிப்பிட்ட
எடை, ஒரு எடையளவு,
சேகரித்தவர்:
கவிஞர் சடையப்பன் |
இடம்:
அரூர்,
தருமபுரி மாவட்டம். |
|