சோம்பேறி
அவனுக்கு ஒரு வேலையும் கிடையாது. ஊர் சுற்றுவதும், உண்பதும் உறங்குவதுமே
அவன் வேலை. உழைப்போர் நடுவே ஒரு புல்லுருவி இருந்தால், அவனுக்கு வசைதான் கிடைக்கும்.
ஆனால் அவனுக்கு மானமிருந்தால் தானே!
வட்டம் போடும் வடக்குத் தெரு
வந்து நிற்கும் தெற்குத் தெரு
உங்குறதும் நெல்லுச் சோறு
உறங்குறதும் கார வீடு
வட்டார வழக்கு: உங்குறது-உண்கிறது.
சேகரித்தவர்:
S.S. போத்தையா |
இடம்:
விளாத்திக்குளம்,
நெல்லை மாவட்டம். |
|