கமலை-1
வறண்ட பிரதேசங்களில் பூமிக்குள் இருக்கும் தண்ணீரைக் கிணறு வெட்டி
கடின உழைப்பால் கமலையின் மூலம் வெளிக்கொணர்ந்து தோட்டப்பயிர் செய்வார்கள்.
கமலையென்ற தகரத்தாலான பாத்திரத்தில் தோலாலான வால் என்ற பையைக் கட்டிக் கயிற்று
வடங்களை இணைத்து மர உருளைகளைப் பொருத்தி மாடுகளைப் பிணைத்து முன்னும் பின்னுமாக ஓட்டி
நீர் இறைக்க வேண்டும். இதற்கு அனுபவம் வேண்டும். அனுபவமில்லாத அவளது மச்சான் கமலை
இறைக்கத் தெரியாமல் திண்டாடுவதைக் கண்டு கேலியும், அனுதாபமும் கலந்து பாடுகிறாள்.
பொட்டலிலே வீடுகட்டி
பொழுதிருக்கத் தாலிகட்டி
கருத்தக் காளை ரெண்டும் கட்டி
கமலெறைக்கப் போகும் கருத்த துரை
பொட்டலிலே கிணறு வெட்டி
போர்க்காளை ரெண்டும் கட்டி
காப்புப் போட்ட கருத்த மச்சான்
கமலை கட்டத் தெரியலையே
சேகரித்தவர்:
S.M.
கார்க்கி |
இடம்:
சிவகிரி. |
|