சில நாட்களில் கமலை இறைப்பதில் தேர்ச்சிபெற்று விட்டான்.
அது கண்ட அவள் உளம் மகிழ்ந்து அவனைப் புகழ்கிறாள்.
கமலை யலங்காரம்
கமலை மாடு சிங்காரம்
கமலை யடிக்கும் மன்னருக்கு
கருத்தப் பொட்டலங்காரம்
சாலை யோரம் கிணறு வெட்டி
சாஞ்ச கமலை போட்டு
இழுத்து விடும் கருத்தத்துரை
இனிக்குதையா கிணத்துத் தண்ணி
மந்தையிலே கிணறு வெட்டி
மயிலைக் காளை ரெண்டு பூட்டி
சீதனம் கொடுத்தானே
சிமிட்டி பாயும் கமலைத் தண்ணி
சேகரித்தவர்:
S.S.
போத்தையா |
இடம்:
கோவில்பட்டி. |
|