|
நெல்லிமரம் காவல்
அறுப்புக்குச் செல்லும் இளைஞன் தன் காதலியிடம் வேலை
முடியும்போது தான் நிற்குமிடத்தைச் சொல்லிவிட்டு, அவளையும் எந்த இடத்தில் வேலை செய்வாய்
என்பதை முன்கூட்டிச் சொல்லிவிட்டுப் போகச் சொல்லுகிறான்.
புள்ளிபோட்ட ரவிக்கைக் காரி
புளியங்கொட்டை சீலைக்காரி
நெல்லறுக்கப் போகும்போது
நான் நெல்லி மரக்காவலடி
கஞ்சிக்கலயங் கொண்டு
கருக்கரிவாள் தோளிலிட்டு
அறுப்பறுக்கப் போகும்போது
உன் இருப்பிடத்தைச் சொல்லிடடி
|
சேகரித்தவர்:
வாழப்பாடி சந்திரன் |
இடம்:
வாழப்பாடி,சேலம். |
|