|
மாடு மேய்க்கும்
சிறுவன்
மாடு மேய்க்கும் சிறுவன் மாட்டுக்குத் தண்ணீர் காட்ட குளத்துக்கு
வருகிறான். அவனுடைய காதலி படித்துறையில் குளித்துக் கொண்டிருக்கிறாள். அவன் அவளையே
பார்த்துக் கொண்டிருந்து விட்டு மாட்டைத் தப்ப விட்டுவிடுகிறான். மாடு தப்பிவிட்டதை
அவள் சுட்டிக் காட்டுகிறாள். ஆனால் அவன் கவலைப்படவில்லை.
|
பெண்
:
|
மலைமேலே மாடு மேய்க்கும்
மாட்டுக் காரச் சின்னதம்பி
மாடோடிப் போகுதடா
மாமலைக்கு அந்தாண்டே
|
|
ஆண்
: |
மாடோடிப் போனாலென்ன
மற்றொருத்தி சொன்னாலென்ன
நீ குளிக்கும் மஞ்சளுக்கு நான்
நின்னு மயங்குரேண்டி
|
|
உதவியவர்
:
வாழப்பாடி சந்திரன் |
இடம்:
சேலம் மாவட்டம். |
|