|
தங்க லைட்டுமில்லை
மின் விளக்குப் போல ஒளிமிகுந்த அவளுடைய வாழ்க்கையில் இன்று
இருள் கப்பிவிட்டது. காரணம் கணவன் மறைந்துவிட்டான்
தங்க வள வளைச்சு
தாவரம்
தொட்டி பண்ணி
தாவர தொட்டியிலே-நான்
தங்காளும்
படுத்திருந்தால்-எனக்குத்
தங்கலைட்
டெரியும்
தனிக்
காந்தம் நிண்ணெரியும்-இப்போ
தங்க லைட்டுமில்லை-எனக்கு
தனிக்காந்தம்
பக்கமில்லை
பொன்னு
வளவளச்சி
பூவாரந்
தொட்டி பண்ணி
பூவாரத்
தொட்டியிலே
பொண்ணா
படுத்திருந்தா-எனக்குப்
பொன்னு
லைட்டெரியும்
புதுக்காந்தம்
நிண்ணெரியும்-இப்ப
பொன்னு லைட்டு மில்லே
புதுகாந்திம்
பக்கமில்லை.
|
சேகரித்தவர்
:
கவிஞர் சடையப்பன் |
இடம்:
அரூர்,சேலம் மாவட்டம். |
|