|
குழந்தையில்லாப்
பாவி
அவளுக்குக் கோடி போடக் குழந்தையோ, அண்ணனோ இல்லை. அனாதை
போலப் பரிதவிக்கிறாள்.
குச்சடி மேல் பலகை
குதிரை வால்
முந்தாணி
கொண்டு வந்து கோடி
போட-நான்
குழந்தை யில்லாப்
பாவியானேன்
அச்சடி மேல் பலகை
ஆனைவாய்
முந்தாணி
அழச்சி வந்து கோடி
போட-நான்
அண்ணனில்லாப்
பாவியானேன்
|
சேகரித்தவர்
:
கவிஞர் சடையப்பன் |
இடம்:
அரூர்,சேலம் மாவட்டம். |
|