|
அழாதே தங்கையரே
இதற்கு முந்தைய ஒப்பாரிகள் தாய் தந்தையரை இழந்த ஒரு பெண் தன்
தாய் வீடு சென்றால், அங்கு அண்ணன் மனைவி படுத்தும் பாடுகளை விளக்கியுள்ளன. அத்தகைய
வகையைச் சேர்ந்தது இவ்வொப்பாரியும். தங்கை அண்ணனிடம் முறையிடுவதையும் அண்ணன் தங்கையைத்
தேற்றுவதையும் உரையாடலாக இப் பாடல் கூறுகிறது
:
ஆத்துத் திருகாணி
அலைச் செடுக்கும்
பட்டாணி
அன்பிலா
அண்ணியிடம்
அஞ்சாத
தண்ணி கேட்டேன்
அண்டா
இரவல் இண்ணா
ஆத்துத்
தண்ணி தூரமின்னா
அதையும்
மனதில் வச்சு
அண்ணனோடு
சொல்லியழுதேன்
அழாதே
தங்கையரே
ஆனை சிலம்பு
தரன்
ஆறு லட்சம்
பொன்னு தரன்
அழாதே
தங்காயிண்ணான்-எனக்கு
ஆனை சிலம்பு
வேணா
ஆறு லட்சம்
பொன்னும் வேணா-உன்
அன்பான வாய்
திறந்து
அனுப்பி வச்சால் போது
மிண்ணன்
வட்டார வழக்கு: அஞ்சாத-அஞ்சாது
;
இண்ணா-என்றான்
; தூரமின்னா-தூரம் என்றாள்
;
தரன்-தருகிறேன்
; போது மிண்ணன்-போதுமென்றேன்.
|
சேகரித்தவர்
:
கவிஞர் சடையப்பன் |
இடம்:
அரூர்,தருமபுரி மாவட்டம். |
|