| பருவத்திற்கும்
பத்துப் பாடல்களாகக் கொண்டு நூறு பாடல்கள் குழந்தையைப்பற்றிப் பாடும் நூலுக்குப்
பிற்காலத்தில் பிள்ளைத் தமிழ் என்று பெயர் இடப்பட்டது. இந்த நூற்றாண்டுவரையில்
இந்த முறைப்படி பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடப்பட்டு வருகின்றன. இந்த இலக்கிய வகை
தமிழில் சிறப்பாகப் போற்றப்படுகிறது. தெய்வங்களைமட்டும் அல்லாமல் அரசர்களையும்
சான்றோர்களையும் பாடுவதற்கு உரியதாகவும் அது பயன்பட்டு வந்திருக்கிறது. இவ்வகை இலக்கிய
வளர்ச்சிக்கு வித்திட்டவர் கண்ணன் குழந்தைப் பருவத்தை ஏறக்குறைய இருநூறு பாடல்களில்
பாடிய பெரியாழ்வாரே ஆவார்.
குழந்தையைத் தொட்டிலில் இட்டுப் பாட்டுப் பாடித் தாலாட்டி
உறங்க வைப்பது தாய்மார்க்கு இன்பமான செயலாகும். அப்போது பாடும் தாலாட்டுப்பாட்டு,
தொன்றுதொட்டுக் குடும்பங்களில் வீட்டுப் பெண்களின் கலையாக இருந்துவருகிறது. தமிழ்
இலக்கியத்தில் மிகப் பழைய தாலாட்டுப் பாட்டாக இப்போது கிடைப்பவை. பெரியாழ்வாரின்
‘மாணிக்கம் கட்டி’ என்ற பத்துப்பாட்டும், குலசேகராழ்வாரின் “மன்னுபுகழ்”
என்ற பத்துப் பாட்டும் ஆகும். இவை பன்னிரண்டு நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட பழைய தாலாட்டுப்
பாடல்கள் என்பது கருத்தில் கொள்ளத்தக்கது.
“மாணிக்கம் பதித்து வயிரமும் இடையிடையே பதித்து
உயர்ந்த ஆணிப்பொன்னால் செய்யப்பட்ட அழகான சிறு தொட்டிலை உனக்காக ஆசையோடு
பிரமன் அனுப்பினான். கண்ணா, நீ உறங்கு; தாலேலோ, சிவபெருமான் உனக்காக மணிமாலையும்
மாதுளம் பூ முதலியவை கலந்து கோத்த மாலைகளும் கொடுத்தனுப்பினான். எம்மை ஆளுடைய கண்ணா,
அழாதே; தாலேலோ. இந்திரன் அழகான கிண்கிணி தந்து அனுப்பினான். கடலின் முத்தும்
பவளமும் சங்குவளையலும் உனக்கு மிகப் பொருத்தம் என்று வருணன் அனுப்பினான். துழாயால்
அழகாகத் தொடுத்த மாலையும் வானுலகக் கற்பக மலர்மாலையும் திருமகள் கொடுத்தனுப்பினாள்.
உச்சிக்கு உரிய மணிச்சுட்டியும் பொன்பூவும் உனக்கென்று பூதேவி கொடுத்தனுப்பினாள்.
அழாமல் கண்ணுறங்கு. கண்ணா, தாலேலோ” என்று பெரியாழ்வார் பாடியுள்ளார்.
|
மாணிக்கம் கட்டி வயிரம் இடைகட்டி |
|
ஆணிப் பொன்னால்செய்த வண்ணச்
சிறுத்தொட்டில் |
|
பேணி உனக்குப் பிரமன் விடுதந்தான் |
|
மாணிக் குறளனே தாலேலோ |
|
வையம் அளந்தானே தாலேலோ |
|