மக்கள் செய்துவந்த
தொழிலுக்கேற்பக் குலங்கள் இருந்தனவே தவிர,
இக்குலங்களுக்குள் உணவுக் கலப்போ, திருமணக் கலப்போ
தடைசெய்யப்படவில்லை. அனைவரும் சேர்ந்து தான் தமிழ்ச் சமுதாயம்
என்பதற்கு ஒரு வடிவம் கொடுத்தனர்.
இதுபோன்ற
எண்ணற்ற கருத்துக்களை மிகச் சிறப்பாகப் புலப்படுத்தி
ஓர் அருமையான நூலை நமது பிள்ளை அவர்கள் தந்துள்ளார்கள். இந்தக்
கருத்துகள் அனைத்தும் முழுமையாக அனைவராலும் படிக்கப்பட
வேண்டுமென்று நான் விரும்புகிறேன்.
|