அந்த வகையில் வாழ்வியலுக்குப் பொருந்தும் வகையில் வரலாறு
அமைய வேண்டுமென்ற கோணத்தில் இந்த நூல் அமைந்துள்ளது. மேலும்
இந்திய வரலாற்றை எழுதுபவர்கள் காவிரி, வைகை ஆற்றங்கரைகளில்தான்
தம் ஆராய்ச்சிகளைத் தொடங்கவேண்டுமென்று பேராசிரியர் சுந்தரம்
பிள்ளை அவர்கள் தெரிவித்த கருத்தை முழுமையாக ஏற்றுக்கொண்டு,
“இந்திய வரலாற்றாராய்ச்சியைத் தென்னிந்தியாவில் தான் தொடங்க
வேண்டும் என்பது இக்கால வரலாற்றாசிரியர்கள் அனைவருக்கும்
உடன்பாடாகும்” என்று கூறுகிறார்.

தொல் பழங்காலம் என்று குறிப்பிடப்படும் வரலாற்றுக்கு முந்தைய
காலத்தை (Pre Historic Period) மிகச் சிறப்பாக வரைந்துள்ளார்.
குமரிக்கண்டம் அதன் வழியிலான தமிழக வரலாற்றின் தொன்மை
ஆகியவை குறித்து பி.டி.சீனிவாச அய்யங்காருடைய கருத்தினை ஏற்று,
பிள்ளை அவர்கள் வரலாற்றைச் சிறப்பாக வரைந்துள்ளார்கள்.

பண்டைத் தமிழகத்தில் ஊன் உண்ணும் வழக்கம் பரவி இருந்தது
என்பதையும், அக்காலத்தில் பார்ப்பனர்களும் ஊன் உண்டதற்குச் சான்று
உண்டு என்பதையும் தெளிவுபடுத்துகிறார். இன்று வாழ்க்கை முறையில்
அவர்கள் சைவமாக மாறி விட்டாலும் ஒரு காலத்தைய நடைமுறை அப்படி
இருந்துள்ளது என்று தெரிகிறது.

இயலும் இசையும் விரவிவரும் வகையில் நடிப்போடு கூடிய கருத்துகள்
தமிழகத்தில் பெருமளவில் நடத்தப் பெற்றன. காலப்போக்கில் அவை சில
உத்திகளையும் இலக்கண மரபுகளையும் இணைத்துக் கொண்டு நாட்டியக்
கலைகள் உருவாக வழிவகுத்தன என்று குறிப்பிடுகிறார்.

இன்று சாதிகளின் வல்லாண்மை பெருகி உள்ளது. முதல், இடை,
கடைச் சங்ககாலம் போய், சாதிச் சங்கங்களின் காலம் என்று
சொல்லுமளவுக்கு இன்றுள்ள நிலை நம்மை வருந்தச் செய்கிறது. ஆனால்,
பண்டைத் தமிழரின் வாழ்க்கையில்