தம் படைப்புக்களை வெளிப்படுத்துவதில் முதன்மை காட்டியுள்ள நூலாசிரியரின் நோக்கம் சிறப்பாகக் கருதத் தக்கதாகும். புலவர் பெருமக்களின் வரலாறுகளைப் படித்து உணர்வதன் வழி ஒவ்வொருவரும் தாமும் தமிழுக்கு அருந் தொண்டாற்ற வேண்டும் என்ற உந்துதலையும் ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இத்தகைய நல்ல ஆக்கப் பணிகள் உருவாவதற்கு என்றும் தோன்றாத் துணையாக இருந்து வரும் மாண்பமை இணைவேந்தர் புரவலர் டாக்டர். எம்.ஏ.எம். அவர்களுக்கு என்றும் நன்றியுடையோம்.

தமிழன்பர்கள் இக்களஞ்சியத் தொகுதிகளை வாங்கிப் பயன் கொள்ளப் பெரிதும் விழைகின்றேன். நூலாசிரியர் மென்மேலும் தமிழ்த் தொண்டாற்றவும் வாழ்வும் வளமும் பெறவும் தில்லைக் கூத்தன் திருவருளை வேண்டுகின்றேன்.

 
தங்கள்
 
பி.வி.வைத்தியநாதன்