என்பதனை உறுதியாக நான் சொல்லமுடியும். கட்சிக் காழ்ப்புக்கு  சிறிதேனும்
இடந்தராத வகையில் எனது எழுதுகோலைப் பயன் படுத்தியுள்ளேன்.

இன்றைய  காங்கிரஸ்  கட்சியானது  பிற கட்சிகளுடன்  நடத்தி வரும்
போட்டி - போராட்டம்  காரணமாக , அதன்  கடந்தகாலப் புனித  வரலாறு
மறக்கப்பட்டோ , மறைக்கப்பட்டோவிடுமானால், அது இந்தியாவுக்கும் தமிழர்
இனத்துக்கும் ஏற்பட்ட பெரும் இழப்பாக முடியும் என்பது என் கருத்து.அந்த
இழப்பு ஏற்படக் கூடாது என்பதற்காகவே, 'கப்பலோட்டிய தமிழன்', 'சுதந்திரப்
போரில் தமிழகம்' ,  'தமிழர் கண்ட காந்தி'  என்னும்  நூற்களை ஏற்கனவே
வெளியிட்டுள்ளேன் . அவற்றின்   தொடர்ச்சியாகவே  இந்த   நூல்  வெளி
வருகின்றது. இன்னும் பல நூல்களையும் வெளியிட எண்ணியுள்ளேன்.  தமிழ்
மொழியை வளர்த்த பெருமையிலே, இன்றுள்ள அரசியல் கட்சிகளிலே  எந்த
ஒரு கட்சிக்கும்  தனிவுரிமை  இருப்பதாக நான்  நம்பவில்லை   என்பதனை
இங்கு  அழுத்தந்திருத்தமாக   எடுத்துக்காட்ட   விரும்புகின்றேன்  . ஆம் ;
என் தலைமையின் கீழ் இயங்குகின்ற - தமிழ்மொழியை  வளர்ப்பதற்கென்றே
வாழ்ந்து   வருகின்ற - தமிழரசுக்   கழகத்தையும்  நினைவில்   கொண்டே 
இதனைக் கூறுகின்றேன்.

தமிழ்மொழியை வளர்க்கும் பணி அம்மொழி தோன்றிய  காலந்தொட்டே
தொடர்ந்து  நடந்து வருகின்றது . அதிலே கடவுளுக்கும் பங்குண்டு  என்பது
பண்டைப் புலவர் பெருமக்களின் நம்பிக்கை.

சங்கம்    வைத்துத்   தமிழ்    வளர்த்தனர்  பாண்டிய   வேந்தர்கள்.
தொல்காப்பியருக்கு   முந்திய  காலத்தைப்  பற்றி   எதுவும்  தெரியவில்லை.
ஆனால், தொல்காப்பியர் காலந்தொட்டு , மகாகவி  சுப்பிரமணிய  பாரதியார்
காலம்வரை தமிழிலே திருக்குறள் , சிலப்பதிகாரம்  போன்ற  முதல்  நூல்கள்
படைத்தும்; வில்லிபாரதம் ,கம்பராமாயணம் போன்ற - வேற்று  மொழி முதல்
நூல்களுக்கு- வழி நூல்கள்  தந்தும் ; மூல நூல்களுக்கு  உரைகள் இயற்றியும்
சிதறிக் கிடந்த பேரிலக்கியங்களைத் தொகுத்து 'எட்டுத் தொகை'-'பத்துப்பாட்டு'
எனப்பெயர் தந்தும்;நவீன அச்சு இயந்திரம் தோன்றிய பின்னர் பழைய பனை
யோலைஏடுகளைச்    செப்பனிட்டுச்    சீர்படுத்தி     நவீன     முறையில்
பதிப்பித்தும்        தமிழ்      வளர்த்த       சான்றோர்      பலராவர்.
அவர்களிலே   அரசர்களுண்டு;   ஆண்டிகளுமுண்டு. புலவர்களும்   உண்டு;
புரவலர்களுமுண்டு.  புலவர்களிலே  பெண்பாற்   புலவர்களும் பெருந்தொண்