|
அந்தச் சரித்திரத்தை-நல்ல
அறிவுப் பொருத்தமுடன்
‘பாட்டிலே காந்திகதை’-எனப்
படங்களும் சேர்ந்ததுவாய்
அறிஞர்கள் மெச்சும்படி-வெகு
அழகுற அச்சடித்த
இளைஞர் இலக்கியத்தைப்-பொலிவுற
இயற்றிய நலக்குரியான்
‘குழந்தைக் கவிஞர்’எனத்-தமிழ்த்தாய்
குலவிடும் தவப்புதல்வன்
தெள்ளிய பாவாணன்-அழ
வள்ளியப் பாவென்னும்
அன்புள என்நண்பன்-கற்றுணர்ந்(து)
அடங்கிய மனப்பண்பன்.
குழந்தை எழுத்தாளர்-சங்கம்
கூட்டி வளர்த்தவனாய்,
சிறப்புள எழுத்தாளர்-பலர்
தோன்றிட வழிசெய்தோன்.
கவித்திறம் வளர்ந்திடவும்-அதில்
கலைத்திறம் கிளர்ந்திடவும்
சீரும் சிறப்போடும்-மிக்க
செல்வச் செழிப்போடும்
உடல்நலப் பலத்தோடும்-தெய்வம்
உறைகிற மனத்தோடும்
பல்லாண்டு வாழ்ந்திருக்க-வாழ்த்திப்
பரமனைப் பணிந்திடுவோம். |
-வெ.இராமலிங்கன் |
|