‘காந்தி மகான் கதை’ ஆசிரியர் கலைமணி
உயர்திரு. கொத்தமங்கலம் சுப்பு அவர்களின்

வாழ்த்து
 

  பாட்டினில் காந்தி கதைபாடி-தமிழ்ப்
பண்பு நிறைந்த கவிபாடி,
நாட்டினில் பொய்கள் நலிந்தோடி-ஒரு
நல்ல பரம்பரை உருவாக,

அள்ளிக் குடித்திடும் நீர்போலே-மிகத்
தெள்ளத் தெளிந்த மொழியாலே,
பிள்ளைக்குப் பாலுடன் புகட்டிடவே-அழ
வள்ளியப் பாகவி பாடிவிட்டார்.

வள்ளியப்பா பாப் பள்ளியப்பா-அதில்
வாசித்த வன்ஒரு புள்ளியப்பா
பிள்ளைக்கெல் லாம்விடி வெள்ளியப்பா-அது
பெத்தவங் களுக்குத் தங்கமப்பா.

அன்னையர் இதனைப் படித்துவிட்டு-நல்ல
அமுதுடன் சேர்ந்தே ஊட்டிடலாம்.
ஆராரோ பாடிடும் நேரத்திலே-தொட்டில்
ஆட்டிஇப் பாட்டைப் படிச்சிடலாம்.