செந்தமிழ்
நாட்டுச் சிறுவர் சிறுமியரின் சிறந்த பத்திரிகையாகத் திகழ்ந்தது
பூஞ்சோலை. அதன் கௌரவ ஆசிரியராகப் பணியாற்றிய வள்ளியப்பா அவர்கள்,
நம்தாயகத்தின் தனிப்பெரும் பெரியோர்கள் பலரின் வாழ்க்கையில் நடந்த சுவையான
நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து எழுதி வந்தார்கள். புது முறையிலே கையாளப்பட்ட
அந்தக்
கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. குழந்தைகளுக்குப் பெரிதும் பயன்படும்
என்ற
எண்ணத்துடன் இப்புத்தகத்தில் ஏழு பெரியோர்களின் வாழ்க்கையில் நடந்த
நிகழ்ச்சிகளைத்
தந்துள்ளோம். தொடர்ந்து இதேபோல் மற்றும் பல பெரியோர்களின்
வாழ்க்கையில் நடந்த
நிகழ்ச்சிகளையும் வெளியிடக் கருதியுள்ளோம்.
இவற்றை வெளியிட இசைவு தந்த ஆசிரியர்க்கும், ‘பூஞ்சோலை’ நிர்வாகிகளுக்கும்
எங்கள் நன்றி.
|