பக்கம் எண் :

புலியைத் தேடிப் புறப்பட்டவர் ! 

     அந்தத் தெருவில் ஒரு நாட்டு வைத்தியரது வீடு இருந்தது. ஒருநாள், அந்த வீட்டின்
எதிரிலே பெரிய கூட்டம் ஒன்று கூடி நின்றது.

     நான்கு வயதுச் சிறுவன் ஒருவன் அக்கூட்டத்தைப் பார்த்தான். உடனே அவனும்
அங்கே ஓடினான் ; கூட்டத்திற்குள் நெருக்கிக்கொண்டு நுழைந்தான் ; முன்னால் சென்று
பார்த்தான்.