பக்கம் எண் :

6

பெரியோர் வாழ்விலே


     தரையிலே ஒரு மனிதன் கிடத்தப்பட்டிருந்தான். அவன் உடல் முழுவதும் பலத்த
காயங்கள் !  அந்தக் காயங்களிலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. நாட்டு
வைத்தியர் அவனுக்குச் சிகிச்சை செய்து கொண்டிருந்தார்.

     “ என்ன விஷயம்? அவன் யார்? ஏன் அவர் உடம்பிலிருந்து இரத்தம் வழிகிறது?”
என்று அந்தச் சிறுவன் பக்கத்திலிருந்த ஒருவரைத் திகிலுடன் கேட்டான்.

     அதற்கு அவர், “தம்பி, ஊருக்குக் கோடியில் இருக்கிறதே கரும்புத் தோட்டம்,
அங்கே இந்த மனிதன் போனானாம் ;  அப்போது, ஒரு புலி வந்து இவன் மீது
பாய்ந்ததாம் ! அதன் பற்களும் நகங்களும் இவனைப் படுகாயப்படுத்தி விட்டனவாம் !” 
என்றார்.

     “பாவம்” என்று கூறிக்கொண்டே அந்த மனிதனிடம் அனுதாபம் காட்டினான்,
சிறுவன்.

     இது நடந்த சில நாட்களுக்குப் பிறகு, ஒருநாள் அந்தச் சிறுவன், வீட்டில் ஏதோ
குறும்பு செய்து விட்டான். அதற்காக அவன் அம்மா கோபம் கொண்டு சில கடுமையான
வார்த்தைகளைக் கூறி விட்டாள். உடனே, அவனுக்கு அம்மா மீது கோபம்
உண்டாகிவிட்டது.

     “என்னைப் பார்த்து அம்மா எவ்வளவு கோபமாகப் பேசினாள் !  வரட்டும், இதே
அம்மா என்னைப்