புலியைத் தேடிப் புறப்பட்டவர் | 7 |
பார்த்து அழும்படி செய்கிறேன் !” என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டான். முன்னே ஒருவரைப் புலி கடித்ததே, அந்தச் சம்பவம் அப்போது அவனுடைய ஞாபகத்துக்கு வந்தது. உடனே, “சரி, நாம் இப்போதே இங்கிருந்து கிளம்ப வேண்டும் ; நேராகக் கரும்புத் தோட்டத்துக்குச் செல்ல வேண்டும் ; அங்கே, புலி நிற்கும். புலியிடம் சென்று, ‘புலியே, உன் கூர்மையான பற்களால் என்னைக் கடி ; உன் கத்தி போன்ற நகங்களால் என் உடலைக் கிழி’ என்று கூற வேண்டும். உடனே, புலி நம் மீது பாயும் ; நன்றாகக் காயப்படுத்தும். இரத்தம் வழியும் ! நான் வீட்டுக்குக் காயங்களுடன் கொண்டுவரப்படுவேன். அப்போது, என் அம்மா என்னைப் பார்ப்பாள். பார்த்ததும் என்ன செய்வாள்? என்ன சொல்வாள்? ‘ஆ ! என் அருமை மகனே ! என் கண்மணியே !’ என்று என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டே கதறுவாள். அத்துடன், ‘என் செல்வ மகனே, உன்னை நான் தெரியாமல் திட்டிவிட்டேன் ; மன்னித்து விடு. என் கண்ணே’ என்று கெஞ்சுவாள். ஆகையால், இப்போதே நான் புறப்படுகிறேன். நேராகக் கரும்புத் தோட்டத்துக்குப் போகிறேன்” என்று தீர்மானித்தான். தீர்மானித்தபடி உடனே கிளம்பிவிட்டான் ; கரும்புத் தோட்டத்தை நோக்கி விரைந்து நடந்தான்.
தோட்டத்தை நெருங்கும் சமயம் காற்று பலமாக வீசியது. ‘விர்ர்... ! விர்ர்... ! என்று காற்று வீசும் |
|
|
|
|