பதிப்புரை
‘உழைப்பே உயர்வு
தரும்’ என்ற உண்மையை உணர்த்தும்
இச்சிறுவர் புதினம் இளைஞர்கள் மனதில் உழைத்து வாழ வேண்டும் என்ற
எண்ணத்தைத் தூண்டுவதாக அமைந்துள்ளது. செல்வக்குடும்பத்தில் பிறந்த
ஒருவன் தன் தந்தையாரின் புகழையோ செல்வத்தையோ பயன்படுத்தாது
தன்னுடைய காலில் தானே நிற்கவேண்டுமென்ற முயற்சியை மேற்கொண்டு
அதில் வெற்றியும் பெறுகிறான். ‘இன்னாரின் மகன் இவன்’ என்று
பெயரெடுப்பதைவிட ‘இவன் தந்தை இன்னார்’ என்று சொல்லும் அளவிற்குப்
பெற்றோர்க்குப் பெயரும் புகழும் ஈட்டித் தரும் உண்மை உழைப்பாளியின்
கதை இதுவாகும்.
புதினம் என்பது
பொழுது போக்கு இலக்கியம்தான். ஆனால்
பொழுதுபோக்குவதற்காக மட்டுமே அமையாது அதைப் படிப்பவர்கள்
வாழ்க்கையில் முன்னேறவும் உதவும் என்றால் அதுபயனுள்ள பொழுது
போக்கு இலக்கியமாகும்.
எதை எழுதினாலும்
இளைஞர்களின் முன்னேற்றத்திற்காகவே எழுதும்
பேராற்றல் படைத்த குழந்தை இலக்கியக் காவலர் டாக்டர். பூவண்ணன்
அவர்கள் எழுதிய இந்நூலை இளஞ்சிறார் அனைவரும் படித்துப் பயனடைய
வேண்டுகிறோம்.
-சைவ
சிந்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.
|