முகப்பு
தொடக்கம்

முன்னுரை

புகழை விரும்பாதவர் எவரும் இந்தப் பூமியில் இருக்க முடியாது.
ஆனால் தற்போது பெற்றோரின் செல்வத்தையும் செல்வாக்கையும்
பிள்ளைகள் பயன்படுத்திப் புகழ் பெற விரும்புகின்றனர். இப்படிப் பெறும்
புகழ் எப்படி நிலைத்து நிற்கும்? வருங்காலம் பெரியோரான இக்காலச் சிறுவர்
சிறுமியர் தம் அறிவால், ஆற்றலால் புகழ்பெற முயலவேண்டும். அதுவே
உண்மையான புகழ்! உயர்ந்த புகழ்! இக்கருத்தை வலியுறுத்த நான் எழுதிய
நாவலே, ‘காளித்தம்பியின் கதை’.

இந் நாவலை வெளியிடும் சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்கும்
அதன் ஆட்சியர், நண்பர் இரா. முத்துக்குமாரசாமி அவர்களுக்கும் என்
நன்றி.

தமிழ்நாட்டுச் சிறார் இந் நாவலைப் படித்துப் பயனடைவார்கள் என்று
நம்புகிறேன்.

25-12-92
கோவை -11

அன்பன்,

முன்பக்கம்
அடுத்த பக்கம்