நச்சினார்க்கினியர் உரை - பொருளதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   2768
Zoom In NormalZoom Out


 

யது     வந்துழிக் காண்க. தலைவன் தலைவியை அன்னை யெனக்
கூறலும்   உளதென்பாருமுளர்.  எழுத்தினுஞ்  சொல்லினு  மென்னாத
முறையன்றிக் கூற்றானே புறத்திற்கும் இவை கொள்க.

“என்னை மார்பிற் புண்ணுக்கு”

“என்னைக் கூரிஃதன்மை யானும்
என்னைக்கு நாடிஃதன்மை யானும்”            (புறம்.85)

“என்ஐமுன் நில்லன்மின் தெவ்விர் பலரென்ஐ
முன்னின்று கன்னின் றவர்”                 (குறள்.781)

“என்ஐ மார்பிற் புண்ணும் வெய்ய”           (புறம்.280)

என்பன கொள்க.

ஏனைய வந்துழிக் காண்க.

இனி, உம்மையாற் பிறவுமுள வென்பது பெறுதலின்,

“எந்தைதன் னுள்ளங் குறைபடா வாறு”          (கலி.61)

என்றாற்போல வருவன பிறவுங் கொள்க.                     (52)

கட்புலனாகக் காட்டலாகாப் பொருளிவையெனல்

246. ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா
கற்பும் ஏரும் எழிலும் என்றா
சாயலும்நாணும் மடனும் என்றா
நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு
ஆவயின் வரூஉங் கிளவி யெல்லாம்
நாட்டிய மரபின் நெஞ்சு கொளின் அல்லது
காட்ட லாகாப் பொருள என்ப.

இது,  கட்புலனாகக்  காணப்படாத  பொருண்மேலும்  கட்புலனாகக்
காணப்பட்டாற்போலப் பொருள் கோடல் வழுவமைக்கின்றது.

(இ-ள்.)

1. ஒப்பாவது:  ஒத்த கிழவனுங் கிழத்தியுமென்றவழி அவரொப்புமை
மெய்வேறுபாடு   பற்றி   மனனுணர்   வானுணர்வதன்றிப்   பொறியா
னுணரலாகாதென்றது; தந்தையரொப்பர் மக்க ளென்பதும் அது.

2. உருவாவது:    உட்கு;    அதுவும்   பொறிநுதல்   வியர்த்தல்
போல்வனவற்றானன்றிப் பிழம்புபற்றி உணரலாகாது;

3. வெறுப்பாவது: செறிவு; அதுவும் மக்கட்குணமாய் இசையாததொரு
மன நிகழ்ச்சியாதலிற் பொறியான் உணரலாகாது;

4. கற்பாவது:  தன்   கணவனைத்  தெய்வமென்று  உணர்வதொரு
மேற்கோள்;

5. ஏராவது: எழுச்சி; அது  எழுகின்ற  நிலைமையென நிகழ்காலமே
குறித்து நிற்கும்.

6. எழிலாவது: அங்ஙனம் வளர்ந்தமைந்த