|
“தொடிய வெமக்குநீ யாரை”
(கலி.88)
எனவுஞ் சினம்பற்றிவரினும் அவை தன்காதலைச்
சிறப்பித்தலின்
அமைந்தன.
“செவ்விய தீவிய சொல்லி யவற்றொடு
பைய முயங்கிய வஞ்ஞான் றவையெல்லாம்
பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைய
அகனகர் கொள்ளா அலர்தலைத் தந்து
பகன்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்
மகனல்லை மன்ற இனி”
(கலி.19)
எனக் கழிபெருங் காதலான் நின்னை
உள்ளவாறறிந்திலே னெனத் தன்
பேதைமையைக் காதலாற் சிறப்பித்தலின் அமைந்தது.
“உறலியா மொளிவாட வுயர்ந்தவன் விழவினுள்
விறலிழை யவரொடு விளையாடு வான்மன்னோ
பெறலரும் பொழுதொடு பிறங்கிணர்த் துருத்திசூழ்ந்
தறல்வாரும் வையையென் றறையுந ருளராயின்.” (கலி.39)
இது நிம்பிரி; வரோடும் விளையாடுவானெனப் பொறாமை கூறியும்
அவன் ஈண்டையானாக வேண்டுமெனக் காதலைச்
சிறப்பித்தலின்
அமைந்தது.
“பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப்
புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்
உண்ணென் றோக்குபு புடைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற்
றரிநரைக் கூந்தல் செம்முது செவிலியர்
பரீஇமெலிந் தொழியப் பந்தர் ஓடி
ஏவன் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி
அறிவு மொழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்
கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோறு உள்ளாள்
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுதுமறுத் துண்ணுஞ் சிறுமது கையளே.”
(நற்.110)
இது, குடிவறனுற்றென நல்குரவு கூறியுங் காதலைச்
சிறப்பித்தலின்
அமைந்தது.
இது, மெய்ப்பாட்டியலுள் விலக்காமையின்
அதனைச் சார ஈற்றிலே
வைத்தார்.
(51)
முறைப்பெயர்பற்றிய வழுவமைத்தல்
246. அன்னை என்ஐ என்றலும் உளவே
தொன்னெறி முறைமை சொல்லினு மெழுத்தினுந்
தோன்றா மரபின என்மனார் புலவர்.
இது, முறைப்பெயர் பற்றி வருவதொரு வழுவமைக்கின்றது.
(இ-ள்.)
சொல்லினும் எழுத்தினுந் தோன்றாமரபின
- சொல்
லோத்தினும் எழுத்தோத்தினுஞ் சொல்லப்படாத இலக்கணத்
தனவாய;
தொல் நெறி முறைமை - புலனெறி வழக்கிற்குப்
பொருந்திய
பழைய நெறிமுறைமையானே ; அன்னை
என்ஐ என்றலும் உள
என்மனார் புலவர் - தோழி
தலைவியை அன்னை யென்றலும்
தலைவி தோழியை அன்னை யென்றலும் இருவருந் தலைவனை என் ஐ
யென்றலும் உள
|