|
அதுவும் பொறிநுதல்
வியர்த்தல் போல்வனவற்றானன்றிப் பிழம்புபற்றி
உணரலாகாது;
3. வெறுப்பாவது: செறிவு; அதுவும் மக்கட்குணமாய் இசையாததொரு
மன நிகழ்ச்சியாதலிற் பொறியான் உணரலாகாது;
4. கற்பாவது: தன் கணவனைத் தெய்வமென்று
உணர்வதொரு
மேற்கோள்;
5. ஏராவது: எழுச்சி; அது எழுகின்ற நிலைமையென நிகழ்காலமே
குறித்து நிற்கும்.
6. எழிலாவது: அங்ஙனம் வளர்ந்தமைந்த பருவத்தும் இது
வளர்ந்து
மாறியதன்றி இன்னும் வளருமென்பது போன்று காட்டுதல்;
7. சாயலாவது: ஐம்பொறியான் நுகரும் மென்மை;
8. நாணாவது: செயத்தகாதனவற்றின்கண் உள்ள மொடுங்குதல்;
9. மடனாவது: கொள்ளுத்தக்கொண்டு கொண்டது விடாமை;
10. நோயாவது: நோதல்;
11. வேட்கையாவது: பொருள்கண்மேல் தோன்றும்
பற்றுள்ளம்;
‘செய்யுண் மருங்கின் வேட்கை’
(தொல்.எழுத். உயிர்மயங்.86)
என்புழி அவாவிற்கு வேறுபாடு கூறினாம்;
12. நுகர்வாவது: இன்பதுன்பங்களை
நுகருநுகர்ச்சி; ‘என்றா’
வென்பன எண்ணிடைச்சொல்;
என்று வருங்கிளவி - ஒப்பு
முதல் நுகர்வு ஈறாகப்
பன்னிரண்டென்று அகப்பொருட்கண் வருங் கிளவிகளும்;
ஆவயின் வருங் கிளவி -
அப்பன்னிரண்டின் கண்ணே புறப்
பொருட் குரியவாய் அவ்வாசகத்தான் வருங் கிளவிகளும்;
ஆங்கு - ஈண்டு உவமவுருபு, அவை போல்வன கிளவி என்பதாம்;
எல்லாம் நாட்டிய மரபின் நெஞ்சுகொளின் அல்லது - ஏனையவும்
நாடகவழக்கத்தாற் புலனெறி வழக்கஞ்செய்த முறைமையானே
நெஞ்சு
உணர்ந்து கொள்ளினன்றி;
காட்டலாகப் பொருள என்ப - உலகியல்
வழக்கான் ஒருவர்க்
கொருவர் கட்புலனாகக் காட்டப்படாத பொருளைப் பொருளாகவுடைய
என்று கூறுவர் புலவர் எ-று.
இவை மேல்வரும் மெய்ப்பாடுபற்றி உணர்தலிற்
கட்புலனாகா
வோவெனின், மெய்ப்பாடாவது மனக்குறிப்பா
|