6 

vi
  

பொருட் சுருக்கம்
  

எல்லா     மொழிகளிலும்  எழுத்து,  சொல்  என்ற  இரண்டிற்கே  இலக்கணம்  அமைந்துள்ளது. தமிழ்
மொழியில்   மட்டும்  எழுத்து,  சொல்,  பொருள்   என்று   மூன்றுக்கும்   இலக்கணம்   அமைந்துள்ளது
இம்மூவகையான  இலக்கண  வகைப்பாட்டைப்  பற்றி   சோமசுந்தர   பாரதியார்  கூறுகையில்  ’’எழுத்துஞ்
சொல்லும்   செய்யுளுக்கு   இன்றியமையாத    உறுப்புகளாதலின்,   அவற்றை   முறையே   முன்னிரண்டு
பகுதிகளாக  வகுத்துக்  கூறின  தொல்காப்பியர்  புலவர்க்குரிய   பொருட்பகுதியை   மூன்றாம்  படலமாக
வகுத்தார்.  மக்கள்   கருத்துக்களை   விளங்க   வெளிப்படுத்துங்   கருவியனைத்தும்   செய்யுளெனப்படும்
செவ்விதாய   உளப்பாடு    அதாவது   உளத்துறுங்   கருத்தைக்   கேட்பொருளனைத்துறக்  கூறுதற்குரிய
சொற்றொடர்களெல்லாம் செய்யுளாகும். பாட்டே செய்யுளென்பது  பிற்காலப்  பிழைவழக்கு,  உரை,  பாட்டு,
நூல்,  பிசி,  குறிப்புமொழி,  மறைமொழி,  பழமொழி  எனப் பலவகையானும், பல்வேறுருவிற்றோன்றி நின்று
பொருள் பயப்பனயாவும் செய்யுளேயாம் செய்யுளெல்லாம் பொருள் பொருளொன்றே மக்கள்  குறியாகலானும்
அப்பொருள் பற்றியும் அப்பொருட்குக் கருவியாகும் செய்யுள் பற்றியும் அவையிற்றுக்குறிப்பும் துணையுமாவன
பிற்பற்றியும் கூறுவனவற்றின் தொகுதி தொல்காப்பியரின் பொருட்படலமாகும்’’ (இந்நூல் பக்.14, 15)
  

பொருளதிகாரம்  ஒன்பது  இயல்களைக்  கொண்டது.  அவற்றுள் அகத்திணையியல், களவியல், கற்பியல்,
பொருளியல்  என்பன  அகத்தோடு  தொடர்புடையன.  புறத்திணையியல்  புறத்துடன் தொடர்புடையது. பிற
இயல்களான   மெய்ப்பாட்டியல்  உவமவியல், செய்யுளியல்  போன்றவை  இரண்டிற்கும்  பொதுவானதாகும்.
மரபியல் தனித்த வகையினது.
  

பொருள்     என்பது  மக்களை  மையமிட்டது.  அது  இரண்டு பிரிவுகளாகப் பகுக்கப் பெறும், அவை
அகம்,  புறம்  என்பன.  நச்சினார்க்கினியர், அகம் என்பதை ’’  ஓதத்  அன்பால்  ஒருவனும்   ஒருத்தியும்
கூடுகின்ற  காலத்துப்  பிறந்த  பேரின்பம்  அக்கூட்டத்தின்  பின்னர்   அவ்விருவரும் ஒருவருக்கு ஒருவர்
தத்தமக்குப் புலனாக இருந்ததெனக்