Primary tabs
உலகத்
தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தொல்காப்பிய
உரைவள வெளியீட்டுத் திட்டத்தின்
21 - வது
வெளியீடாக இந்த ‘அகத்திணையியல்’
அமைகின்றது.
தொல்காப்பியப்
பொருளதிகாரத்தின் முதலியலாகையால் இது
தனக்கெனச் சில தனிச்சிறப்புகளைக்
கொண்டுள்ளமை இந்நூலில் வெளிப்படுகின்றது.
நூற்பா,
ஆங்கில மொழிபெயர்ப்பு, ஒத்த பிறநூற்
செய்திகள்,
மரபுரைகள், தற்கால உரை, உரைவளப்
பதிப்பாசிரியர் கருத்துகள் என்பன பிற
தொகுதிகளில் போல் இங்கும் தரப்படுகின்றன.
தேவையானவிடத்து
அடிக்குறிப்பு விளக்கங்களும்
அளிக்கப்படுகின்றன. முயற்சி
பாராட்டுக்குரியது.
அச்சாகுங்காலை,
நூலில் ஏற்பட்டுள்ள பிழைகளைக்களைந்து,
அறிஞர் பெருமக்கள் நூலை அணுக
வேண்டுகிறோம். 12, 14, 17,
29, 42, 53, 57 ஆகிய நூற்பாக்கள் சூத்திரவடிவில்
அச்சிடப்படாத பிழையையும்
நீக்கிக் கற்க வேண்டுகிறோம். பக்க
மேற்தலைப்பு 83-ஆம்
பக்கம் வரை ஒருவகையாகவும், பின்பு வேறு
வகையாகவும் அமைவதும் சீர் செய்யப்பட
வேண்டியதாகும்.
‘பொருட் சுருக்கம்’
என்ற பகுதியை எழுதியுதவிய நிறுவன ஆய்வாளர்
திரு.தி.மு.கந்தசாமி, எம்.ஏ.,எம்.பில்.,
அவர்கட்கு நன்றி.