“மீன்றேர்ந் தறாந்திய கருங்கால் வெண்குருகு தேனார் ஞாழல் விரிசினைக் குழூஉந் தண்ணந் துறைவன் றவிர்ப்பவுந் தவிரான் றேரோ காண்கலங் காண்டும் பீரேர் வண்ணமெஞ் சிறுநுதற் பெரிதே.” இஃதடிதோறுங் கடைச் சீரிரண்டும் மறுதலைப் படத்தொடுத்தமையாற் கடையிணைமுரண். “சார லோங்கிய தடந்தாட் டாழை கொய்ம்மலர் குவிந்து தண்ணிழல் விரிந்து தமிய மிருந்தன மாக நின்றுதன் னலனுடைப் பணிமொழி நன்குபல பயிற்றி வீங்குதொடிப் பணைத்தோள் நெகிழத் துறந்தோ னல்லனெம் மேனியோ தீதே.” இஃதடிதோறும் முதற்சீர்க்குப்பின்னும் மூன்றாஞ்சீர்க்குப்பின்னும் மறுதலைப்படத் தொடுத்தமையாற் பின்முரண். “காவியங் கருங்கட் செவ்வாய்ப் பைந்தொடிப் பூவிரி சுரிமென் கூந்தலும் வேய்புரை தோளு மணங்குமா லெமக்கே.” இது, முதற்சீரெழுத்தும் மூன்று சீறும்மறுதலைப்படத்தொடுத்தமையாற் கடைக்கூழைமுரண். “போதுவிரி குறிஞ்சி நெடுந்தண் மால்வரைக் கோதையிற் றாழ்ந்த வோங்குவெள் ளருவி காந்தளஞ் செங்குலைப் பைங்கூ தாளி வேரல் விரிமலர் முகையொடு விரைஇப் பெருமலைச் சீறூ ரிழிதரு நலங்கவர்ந் தின்னா வாயின வினியோர் நாட்டே.” இஃதிடையிருசீரும் மறுதலைப் படத்தொடுத்தமையால், இடைப்புணர்முரண். முரண்டொடைக்கு மென்றவும்மையால் ஒழிந்ததொடைக்குமவ்வாறே கொள்க. (2) |