பக்கம் எண் :
 

செய்யுண் மொழியியல் 37

“அகத்திய னுதலிய பல்பொருள் வகையான்
அகவல் வஞ்சி யாமிரு பாவினும்
அவைவரத் தொடுப்ப தவயவ மாலை
அதுகலி விரவினும் வரையா ராண்டே.”

என்பது பொய்கையார் பாட்டியல்.

    
(உரை II). எ - து.......................அகங்கால் முதலாகக் குழல் ஈறாகச்
சொல்லப்பட்ட இவ்வுறுப்பனைத்தும் குறையாமற் சிறப்பித்து முன்சொன்ன
பாதாதிகேசப் பிரபந்தம் பாடப்படுவது எ - று.

     (பி - ம்.) 1 ‘பரட்கணைக்கால்’ 2 ‘மிகுங்காலுண் டாயிடை கொப்பூழ்
வயிறுயர் வெம்முலையாய்’ (19)


உலா, தூது குழமகன்
   
45. தெருவினிற் பேதை முதலெழு வோர்கள் 1திறத்துவகை
ஒருவனை யேத்துங் கலிவெண்பா தூதுலா ஒண்டொடியாய்
2மருமலர்க் கையிற் குழமகன் மேல்வைத்த மன்னவர்க்குத்
தருகலி வெண்பாக் குழமக னாமென்று 3சாற்றுகவே.

     (உரை I). எ - ன், உலாப்புறமும் குழமகனும் ஆமாறுணர்த்...........று.

     (இ - ள்). தெருவின்கண் பேதை பெதும்பை மங்கை மடந்தை
அரிவை தெரிவை பேரிளம்பெண்ணென ஏழும் வழுவாது வேட்டோர்
தமக்காக்கலும் காவலர் தமக்கும் உரிமை களவென உணர்தல்
வேண்டுமென்ப. “பேணுதகு சிறப்பிற் பெண்மக வாயின், மூன்றா மாண்டின்
மொழிகுவ குழமகன்.”

     (உரை II). எ - து. எழுவகைப் பருவத்துப் பெண்களும் தெருவினில்
திருவுலாப்புறத்து வருகிறவனைக் கண்டு மயங்கி மயலெய்தியதாகக்
கலிவெண்பாவினாலே கூறுவது உலாவென வழங்கப்படும். தூது பாடுவதும்
குழமகன் பாடுவதும் இக்கலிவெண்பா வெனப்படும் எ - று.

     (பி - ம்.) 1 ‘டிறத்துக்கமை’ 2 ‘வருமகற்’ 3 ‘சாற்றுவமே’ (20)