பக்கம் எண் :
 
34

(இ-ள்.) ஒன்றினைத் துடக்கிக் 1கொடு நிற்றலே தனக்குப் பொருளாகவுடைய ஆறாம் வேற்றுமைக்கு ஆன் ஆள் ஆர் ஆர்கள் அது இன என்னுஞ் சொற்களின் முன் உடை என்னும் ஆறாம் வேற்றுமை பெற்று, உடையான்-உடையாள்-உடையார்-உடையார்கள்-உடையது-உடையின வென்னும் ஆறு பிரத்தியமும் முன் சொல்லப்பட்ட எட்டுப் பிரகிருதிகளின் பின்பு மரபு பிழையாமல் வரும்; உடையென்னும் வேற்றுமையின் பின்பு அகாரம் ஆகமமாய் உடையவென்றும் வரும்; இந்த ஏழு சொற்களின் முன்னின்ற ஆறாம் வேற்றுமைதான் காரக பதமாகாதே ஒன்றைத் துடக்கிக் 2கொடு நிற்குமிடத்து வரப்பெறும்; ஆறாம் வேற்றுமை காரக பதமாகும் பொழுது கு என்னும் பிரத்தியமொன்றே வரும்; ஆதாரமென்று சொல்லப்பட்ட பொருளின்மேல் வரும் ஏழாம் வேற்றுமைக்கு, கே உழை வயின் பக்கல் உழி இல் கண் என்னுமேழு பிரத்தியமும் உரிய. 'சார் பிறவும்' என்பதனால், இடம் இடை முன் பின் கீழ் மேல் உள் புறம் வாய் முதலியவும் உரிய; 'வான் நாமலி' என்பதன் பொருள், வாலியதாய் நாவின்கண் மலியாநின்ற என்பது. அவதி என்று சொல்லப்பட்ட பொருளின் ஐந்தாம் வேற்றுமைப் பிரத்தியமானது, ஏழாம் வேற்றுமைப் பிரத்தியங்களின்பின் 'நின்று' என்னுஞ் சொற்பெற்று வரும் (எ-று.)

வரலாறு:- இவன் கொற்றனுடையான்.
இவள் கொற்றனுடையாள்.
இவர் கொற்றனுடையார்.
இவர்கள் கொற்றனுடையார்கள்.
இது கொற்றனுடையது.
இவை கொற்றனுடையின எனவரும்.

இவை கொற்றனுடையன.
இது கொற்றனது என முடிப்பாருமுளர்.

இவனுடைய மகன்
கொற்றனுடைய வீடு

என உடையவென்னும் பிரத்தியத்தானுமுடியும். இவை எல்லாம் ஆறாம் வேற்றுமையாம் இவ்வேற்றுமைதான் காரகபதமாகாதே ஒன்றைத் துடக்கிக் 3கொடு நின்று முடியும். 'குவ்வேல்


1, 2, 3. இங்குக் 'கோடு நிற்றல்' என்பதும் பாடம்.