பக்கம் எண் :
 
60

6. தத்திதப்படலம்1

52. தத்திதப் பிரத்தியங்கள்

அன்னிய னீன னிகனேயன் வான்வதி யம்மிகரம்
வன்னு அகரத்தொ டானாளன் மானக னாதிமற்றுந்
துன்னிய சீர்த்தத் திதத்தின் பிரத்தியஞ் சுவ்வென்பது
மன்னு மரபு பிழையாம லெங்கும் வரப்பெறுமே.

(இ-ள்.) அன், இயன், ஈனன், இகன், ஏயன், வான், வதி, அம், இவன், உ, அ, ஆன், ஆளன், மான், அகன் முதலிய 2பிரத்தியங்களும் சு என்பதும் தத்திதப் பிரத்தியங்களாம் (எ-று.)

'மன்னு மரபு பிழையாமல்' என்றதனால் வேற்றுமைச் சுப்போ ல, சு எங்குமழியப் பெறும் என்க.

(1)

53, 54. தத்திதங்கள் நிகழும் இடம் இவை என்பது

உண்ணு மிதனா லுரைக்கு மிதனை யுடையனிது
பண்ணு மிதனைப் பயிலு மிதிற்பயன் கொள்ளுமித்தால்
எண்ணு மிதனை யிதனுக்கு நாயக னீங்கிருக்கும்
நண்ணு மிதனை யிதையொக்கு மிங்குள னன்னயத்தே.

மகனிவ னுக்கிவ ளுக்கிந்த வர்க்கத் தினனிவனைத்
தகவிய தேவ னெனும்யாவ னென்றுநற் றத்திதங்கள்
நிகழும்; பிறபொரு ளின்கண்ணு நிற்கும்; நினைந்தவற்றைப்
புகண்மலி தெய்வப் புலவர்க்கும் பொச்ச மடக்கரிதே.

(இ-ள்.) தத்திதப் பிரத்தியங்கள் நிகழுமிடத்து இதனால் உண்ணுவன் யாவன் என்பது முதலாக, இவனைத் தெய்வமாகக் கொள்வான் யாவன் என்பது ஈறாகக் கூறப்பட்ட பொருள்களிலும் இவைபோலும் பிற பொருளின்கண்ணும்


1. இது தத்திதாந்தத்தைக் கூறும் படலம் என்றாம். தத்திதாந்தம் என்பது, தத்திதாந்தச் சொற்களைக் குறித்து நின்றது.

பிரயோக விவேகம் தத்திதப் படலம் முதற்சூத்திர உரையில், "முன்சொல் தன்னைத் துன்னும் தொடர்மொழி எல்லாம் ஒழித்துப் போய்ச் சேரும் பிரத்தியத்தை உடைய சொல்லே தத்திதாந்தத்தை உடைய சொல்லாம்," என்றதை ஈண்டு நோக்குக.

2 'பிரத்தியயம் என்னும் வடமொழிச் சிதைவு' என்பது பழைய குறிப்பு.