பக்கம் எண் :
 
224தண்டியலங்காரம்

இ - ள் : இனன் - சோழன், மான வார் ரணம் - வலிய மிக்க போர் செய்த இடமானவை, கானம் ஆரணம் அரியவாய் - இசையோடு கூடிய வேதம் அரியவாய், இனன் - கூட்டம் பொருந்திய, தான வாரணம் - மதயானை, அரியவாயின - அரியவாய், கான வாரணம் - காட்டுக் கோழியையும், அரிய ஆயின - சிங்கங்களையும் உடையவாயின எ - று.

சோழன் போர் செய்யாத முன்னர் மறை முழக்கமும், யானைகளும் உடைய இடங்கள், போர் செய்த பின்னர்க் காட்டுக் கோழி முழக்கமும், யானையைக் கொல்லவல்ல சிங்கங்களும் உடையவாயின எனக் கொள்க.

இது முரசின் வார்களைப்போல் அமைந்திருத்தலின் முரசபந்தம் எனப்பட்டது.

(வி - ரை) மூன்றாம் அடியிலுள்ள 'அரியவாய்' என்ற தொடருக்குப் பொருள் கூறப்படவில்லை. எனினும் பின்வருமாறு கூட்டிப் பொருள் கொள்ளல் தக்கதாம். மானவார் ரணம் - வலிய மிக்க போர் செய்த இடங்கள், அரியவாய் - இல்லாதவை யாயின (ஏன் எனில், அவன் போர் செய்த இடங்கள் எல்லாம்) என ஒரு தொடரை வரவழைத்துக்கொண்டு, பின்னுள்ள பகுதியுடன் கூட்டுக.

(18) திரிபாகி என்பது, மூன்று எழுத்துக்கூட ஒரு மொழியாகியும், அதில் முதலெழுத்தும் கடையெழுத்தும் கூட வேறொரு மொழியாகியும், இடையெழுத்தும் கடையெழுத்தும் கூட மற்றொரு மொழியாகியும் வருவது.

எ - டு :

'மூன்றெழுத்தும் எங்கோ முதலீ றொருவள்ளல்
ஏன்றுலகங் காப்ப(து) இடைகடை - யான்றுரைப்பிற்

பூமாரி பெய்துலகம் போற்றிப் புகழ்ந்தேத்தும்

காமாரி காரி மாரி'

இதனுள், மூன்றெழுத்தும் எம்முடைய கோவாகிய காமாரி எனவும், இதன் முதலெழுத்தும் கடையெழுத்தும் கூடக் காரி என்றொரு வள்ளல் எனவும், இதன் இடையெழுத்தும் கடையெழுத்தும் கூட மாரி என்று உலகங் காக்கும் மழை எனவும் வந்தவாறு கண்டு கொள்க.

திரிபாகி என்பதற்கு மூன்று பாகத்தை உடையது என்று பொருள்.

(வி - ரை) காரி, இவன் கடை யேழு வள்ளல்களுள் ஒருவன். மலையமான் திருமுடிக்காரி என்ற பெயரை யுடையவன். இவனுடைய கொடைச் சிறப்பினைப் புறநானூற்றால் அறியலாம்.

(19) திரிபங்கி என்பது, ஒரு செய்யுளாய் உறுப்பமைந்து ஒரு பொருள் பயப்பதனை, மூன்றாகப் பிரித்து எழுத வெவ்வேறு செய்யுளாய்த் தனித்தனியே பொருள் பயந்து, தொடையும் 1கிரியையும் தனித்தனியே காண வருவது.

எ - டு :

'ஆதரந் தீரன்னை போலினி யாய்! அம்பி காபதியே!

மாதுபங் கா! வன்னி சேர்சடை யாய்! வம்பு நீண்முடியாய்!

ஏதமுய்ந் தாரின்னல் சூழ்வினை தீரெம்பி ரானினியார்

ஓதுமொன் றே!உன்னு வாரமு தே!உம்பர் நாயகனே!'


1. கிரியை - வினை.