புறனடை 125. | மெய்பெற விரித்த செய்யுள் திறனும் | | எய்திய நெறியும் ஈரைங் குணனும் | | ஐயெழு வகையின் அறிவுறும் அணியும் | | அடியினும் சொல்லினும் எழுத்தினும் இயன்று | | முடிய வந்த மூவகை மடக்கும் | | கோமூத் திரிமுதல் குன்றா மரபின் | | ஏமுற மொழிந்தமிறைக் கவியீ ராறும் | | இவ்வகை யியற்றுதல் குற்றம் இவ்வகை | | எய்த வியம்புதல் இயல்பென மொழிந்த | | ஐவகை முத்திறத்(து) ஆங்கவை யுளப்பட | | மொழிந்த நெறியின் ஒழிந்தவும் கோடல் | | ஆன்ற காட்சிச் சான்றோர் கடனே. |
எ - ன், இந்நூல் உரைக்கப்பட்ட இலக்கணம் அனைத்தும் தொகுத்து, இவ்வாறன்றிப் பிறவாறு வருவன உளவெனினும் தழீஇக் கொள்க எனப் புறனடை உணர்த்துதல் நுதலிற்று. இ - ள் : பொருள்பெற விரித்த முத்தகம், குளகம், தொகைநிலை, தொடர்நிலை எனக் கூறப்பட்ட செய்யுள்மரபும்; அச்செய்யுட்குக் கௌடம், வைதருப்பம் எனப் பொருந்திய நெறியும், அவற்றொடு தொடர்ந்த செறிவு, தெளிவு, சமநிலை, இன்பம், ஒழுகிசை, உதாரம், உய்த்தலில் பொருண்மை, காந்தம், வலி, சமாதி என்று கூறப்பட்ட பத்துவகைக் குணமும்; தன்மை முதல் பாவிகம் ஈறாகக்கிடந்த முப்பத்தைந்துஅலங்காரமும்; அடியினாலும், சொல்லினாலும் கூடி முற்றுப்பெற வந்த மூவகை மடக்குஅலங்காரமும்; கோமூத்திரி முதலாகக் குறைபாடில்லாத இலக்கணத்தில் பிழைப்பின்றி வந்த மிறைக்கவி பன்னிரண்டும்; இவ்வாறு கூறுதல் வழுவென்றும், அவற்றையே இவ்வாறு கூறுதல் வழக்கென்றும் சொல்லப்பட்ட பதினைந்து 1கூறுபாடும உள்ளிட்டுக் கூறப்பட்ட இலக்கண நெறியின் ஒழிந்து வருவன உளவெனினும் தழீஇக்கோடல், அமைந்த அறிவுடையோராகிய மேலோரது கடனாம் எ - று. அஃதேல், மேற்கூறியவற்றையே ஈண்டும் கூறியது புனருத்தமாம் பிறவெனின், 'தொகுத்து முடித்தல்' என்பது தந்திரவுத்தியாகலான் இவ்வாறு உரைக்கப்பட்டது என்க. அஃதேல், 'எழுத்தின் கூட்டம் இடைபிறி தின்றியும்' (சொல்லணி - 1) என எழுத்து மடக்கேயன்றே முன் சொன்னது; ஈண்டு 'அடியினும் சொல்லினும் எழுத்தினும் இயன்று' என்று முறைபிறழக் கூறியது என்னையோ? எனின், இதுவும் தலை தடுமாற்றம் என்னும் உத்திவகையான் உரைக்கப்பட்டது. அல்லதூஉம், அடிமடக்கு என்பனவும், சொல்மடக்கு என்பனவும், எழுத்தின் கூட்டம் என்பது அறிவித்தற்கும்; ஓரெழுத்தானும், ஓரினத்தானும் வருவனவும் அப்பாற்படும் என்றற்கும்; கோமூத்திரி முதலாகக் கூறப்பட்ட மிறைக்கவியை நோக்கி ஆராயுங்கால் பெரும்பான்மைய எழுத்தின் மடக்கின்பாற்
1. 'வேறுபாடும்' என்பதும் பாடம்.
|