பக்கம் எண் :
 
150இறையனார் அகப்பொருள்

       என்னா குவள்கொல் தானே பன்னாட்
      புணர்குறி செய்த புலர்குரல் ஏனல்
      கிளிகடி பாடலும் ஒழிந்தனள்
      அளியள் தானின் அளியல திலளே.’ (அகம்-118)

      ஒன்று மறுப்பின் ஒன்றின்கண்ணே நிற்குங்கொல்லோ என்று,
இரண்டும் மறுத்து வரைவின்கண்ணே படுத்தவாறு எனக் கொள்க.

             
தன்னுள் கையாறு எய்திடுகிளவி

       ‘தன்னுள் கையாறு எய்திடு கிளவியும்’ என்பது, தன்னுட்
கையாற்றினை ஏதிலது ஒன்றின்மேலிட்டுச் சொல்லுதல்; அதற்குச் செய்யுள்:

  ‘
தன்போற் சினத்துரும் ஏந்திய கோன்கன்னித் தாழ்துறைவாய்ப்
  பொன்போல் மலர்ப்புன்னைக் கானலும் நோக்கிப் புலம்புகொண்ட
  என்போல் இரவினெல் லாந்துயி லாதுநின் றேங்குதியால்
  அன்போ டொருவற் கறிவழிந் தாயோ அலைகடலே.’        (233)

  ‘பொன்தான் பயப்பித்து நன்னிறங் கொண்டு புணர்ந்தகன்று
  சென்றார் உளரோ நினக்குஞ்சொல் லாய்செந் நிலத்தைவெம்போர்
  வென்றான் வியனில வேந்தன் விசாரிதன் வெல்கழல்சேர்ந்து
  ஒன்றார் முனைபோல் கலங்கித்துஞ் சாயால் ஒலிகடலே.’     (234)

    ‘பறைவாய் ஒலியோதம் பந்த(ர்) உகளும்
    துறைசேர் சிறுகுடியார் துஞ்சினும் துஞ்சாய்
    நிறையின் மருள்மாலை எம்போல நீத்த
    துறைவன் உடையையோ நீவாழி வீராய்.’

       ‘என்போல் இரவினெல்லாந் துயிலாய் நீயும் நின்காதலர் மாட்டு
என்போல் அறிவிழந்தாயோ?’ என்னும்; என்றது தலைமகன் கேட்பின்
வரைவானாம்; தோழி கேட்பின் வரைகடாவுவாளாம்; யாருங்
கேட்பாரில்லையாயின் தானே சொல்லி ஆற்றுவாளாம்.

       ‘அன்னமரபிற் பிறவுந்தொகைஇத் தன்னை அழிந்த கிளவி எல்லாம்’
என்பது, அன்னமரபிற் பிறவுந் தனது ஆற்றாமையாற் சொல்லுஞ் சொல்
எல்லாம், என்றவாறு.

       ‘வரைதல் வேட்கைப் பொருள என்ப’ என்பது, வரைதல் வேட்பும்,
வரைதல் வேட்டுச் சொல்லுஞ் சொற்களும் என்றவாறு; வரைதல் வேட்பத்
தலைமகள்சொல்லும் சொல்லெல்லாம்; தலைமகனைத் தோழி சொல்லுஞ்
சொல்லெல்லாம் வரைதல் வேட்டுச் சொல்லுஞ் சொற்கள் என்றவாறு.