பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - கற்பு 199
 

      இதன் பொருள்: திணை யென்பது பல்பொருள் 1ஒரு சொல்லாய்க்
கிடந்தது; நிலத்தினையும் திணை யென்ப, குலத்தினையும் திணை யென்ப,
ஒழுக்கத்தினையும் திணை யென்ப; ஆகவே, ஆகுபெயரால், அவரால்
ஒழுகலாறு நிகழ்ந்த இடத்தையும் திணை என்றார்; அவை, குறிஞ்சி பாலை
முல்லை மருதம் நெய்தல் என ஐந்துவகைப்படும்.

     அவை அறியுமிடத்து, முதல் கரு உரிப்பொருள்பற்றி அறியப்படும்
என்றவாறு. அவ்விலக்கணமெல்லாம் மேல்,

     
‘அன்பி னைந்திணை’                     (இறையனார்-1)

என்றதன்வழியே உணர்த்திப் போந்தாம். அவை திணை யெனப்படுவன.

      அகப்பாட்டின் ஒரு பாட்டுக் கேட்டவிடத்து இவ்வைந் திணையுள்ளும்
இன்னதொன்றுபற்றி வந்ததென்று சொல்லுவது. இனிக் கைகோள் என்பது,
களவு கற்பு என்றவாறு; இது களவுபற்றி வந்தது, இது கற்புப்பற்றி வந்தது என
அறிவது.

      இனிக், கூற்று என்பது, கூறுதற்கு உரியாரை அறிந்து, அவருள்
இன்னார் கூறினார் இப்பாட்டு என்பது அறிவது; அக்கூறுதற்கு உரியாரைச்
செம்பூட்சேயார் கூற்றியலுள்ளும், தொல்காப்பியனார் பொருட்பாலுள்ளும்
கண்டுகொள்க.

 
‘பார்ப்பான் பாங்கன் தோழி செவிலி
  சீர்த்தகு சிறப்பிற் கிழவன் கிழத்தியோடு
  அளவியல் மரபின் அறுவகை யோரும்
  களவினிற் கிளவிக் குரியர் என்ப.’ (செய்யுளியல், 181)

  ‘பாணன் கூத்தன் விறலி பரத்தை
  யாணஞ் சான்ற அறிவர் கண்டோர்
  பேணுதகு சிறப்பிற் பார்ப்பான் முதலா
  முன்னுறக் கிளந்த கிளவியொடு தொகைஇத்
  தொன்னெறி மரபிற் கற்பிற் குரியர்’ (செய்யுளியல், 182)

என்று ஓதினார் தொல்காப்பியனார் எனக் கொள்க.

     இச்சொல்லப்பட்டாருள் இன்னார் கூற்று என்றறிவது.

     இனிக், கேட்போர் என்பது, இன்னார் கூற இன்னார் கேட்டார்
என்றறிவது; தோழி கூறத் தலைமகள் கேட்டாள், தலைமகள் கூறத் தோழி
கேட்டாள்; தோழி கூறத் தலைமகன்

   1. ஒரு சொல் ஒன்றாய்க்.