அன்பினானாய ஐந்திணைக்குரிய இறைச்சிப்பொருள்
உணர்த்தியதில்லை; அவை,
‘தெய்வம் உணாவே மாமரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ.’ (அகத்திணையியல்-20)
ஐவகை நிலத்தில் ஓதப்பட்ட இடமும் காலமும் தெய்வமும் உணவும் மாவும்
மரமும் புள்ளும்
பறையும் செய்கையும் யாழும் ஆடூஉப்பெயரும்
மகடூஉப்பெயரும் அவ்வவ் நிலத்துக்கு மக்களும்
பூவும் நீரும் இருதுவும்
என்றித் தொடக்கத்தனவும். ஐந்திணைக் குரியன உரிப்பொருளும், அவற்றின்
நிமித்தமும், ஐந்திணைக்குரிய விகற்பமும் அவை எல்லாம் இதுவே ஓத்தாகத்
தந்துரைக்க.
இனி, எண்வகை மணத்தின் விகற்பமும் இதுவே ஓத்தாகத்
தந்துரைக்க.
இனிக், கந்தருவ வழக்கின் விகற்பமும் இதுவே ஓத்தாகத் தந்துரைக்க,
இயற்கைப் புணர்ச்சிக் கண்ணும் விளையாட்டொக்கல் வேறிடம் படர
இருவரும் தம்முள் தலைப்பெய்யுமாறு,
புணரும் இடத்துத் தன்மையும், அது
கன்மேற் பொதும்புபட்டுக் கோட்டுப்பூவும் கொடிப்பூவும் நிரந்து,
நீர்த்துறைமேற் சித்திரப் படாம் விரித்தாலேபோன்று, வண்டும் தும்பியும்
வரிக்கடைப்
பிரசமும் யாழும் குழலும் முரன்று, கடற்றிரையும் கானியாறும்
முழவும் துடியும் பாடியம்ப, இரவோரன்ன
கொழு நிழற்றாய், நிலவோரன்ன
வெண்மணலொழுகி, அகத்தார் புறத்தாரைக் காண்டல் எளிதாய்ப்,
புறத்தார்
அகத்தாரைக் காண்டல் அரிதாய், வானோரும் விழைவைத் தவிர்த்தோரும்
விரும்பும் பொழிலுள், இயற்கைப் புணர்ச்சியது இறுதிக்கண், தலைமகளை
ஆற்றுவித்துப்
பிரியும் பிரிவும் இதுவே ஓத்தாகத் தந்துரைக்க.
இனிப், பாங்கற்கூட்டத்துக்கண் தலைமகனது வேறுபாடு கண்டு
பாங்கன் வினாவத் தலைமகன்
சொல்லினவும், அவை கேட்ட பாங்கன்
கழறினவும், பாங்கற்கு எதிர்மறையாகச் சொல்லினவும்
எதிர்ப்பட்ட
தலைமகனது ஆற்றாமை கண்டு பாங்கன் தலைமகற்குக் கவன்றனவும்,
கவன்றபாங்கன்
நின்னாற் காணப்பட்ட உரு எவ்விடத்து எத்தன்மைத்து
என்னுமாறும், தலைமகன் இன்னவிடத்து
இத்தன்மைத்து என்னாற்
காணப்பட்டஉரு என்னுமாறும், அதுகேட்ட பாங்கன் அவ்விடத்து
எதிர்நோக்கிச்
செல்லுமாறும், அவ்விடம் புக்குப் பாங்கன் தலை
|