சூத்திரம்-9
முன்னுற உணரினும் அவன்குறை உற்ற
பின்னர் அல்லது கிளவி தோன்றாது.
என்பது என்னுதலிற்றோ எனின், தலைமகன்முன் நின்று தோழி சொல்லாடுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.
இதன் பொருள்: முன்னுற உணரினும் என்பது-மதியுடம்படுப்பக்
கூட்டமுண்மை உணர்ந்தாளாயினும் என்றவாறு; அவன் குறையுற்ற பின்னர் அல்லது என்பது - அவன்
இரந்து பின்னின்ற பின்னரல்லது என்றவாறு; அவன் இரந்து பின்னிற்குமாறு,
‘குறையுறுங் கிழவனை
உணர்ந்த தோழி’ (இறையனார்-12)
என்னுஞ் சூத்திரத்துட் சொல்லுதும்; கிளவி தோன்றாது என்பது -முடிப்பல் என்னுஞ் சொல் தோன்றாது
என்றவாறு.
அஃதாமாறு, மதியுடம்படுத்துத் தன் கருத்தறிவித்துப் பின்னைத்
தழையும் கண்ணியும் கொண்டு பின்னிற்கும். நின்றானொடு, முடிப்பக் கருதுவாள், தன்கண் நாணுக்
கெடுந்துணையுங் குறியாடும்; ஆட, அற்றைக்கன்று ஆற்றாமை அவற்குப் பெருகும்; பெருகுவது கண்டு,
அற்றைக்கன்று இவட்கு நாணுச் சுருங்க, இரண்டும் துலாத்தலைப்பட்டு எடாநின்றன; நின்றுழி,
அவனது ஆற்றாமையும் இதனினூங்குப் பெருகுமா றில்லையெனப் பெருக்கத்திற்கு வரம்பெய்தி நின்றது;
இவளது நாணும் இதனினூங்கு நுணுகுமாறில்லையென நுணுக்கத்திற்கு வரம்பெய்தி நின்றது. நின்ற நிலைமைக்கண்
தலைமகன் ஒரு சொற் சொல்லும். என் சொல்லுமோ எனின், இன்றினூங்கெல்லாம் இக் கருமம்
நின்னாள் முடியும் எனக் கருதிவந்து உழந்தேன்; இனி நின்னான் முடியாமை உணரப்பட்டது; பட்டமையான்,
இனி இளிவந்தன செய்தாயினும் முடிப்பல், இதனை இன்றியமையேனாகலான், என்னும். இளிவந்தன
செய்தலாவது, மடலூர்ந்தானும் வரைபாய்ந்தானும் என்றவாறு; அதற்குச் செய்யுள்:
மடலூர்தல்
‘படலே றியமதில் மூன்றுடைப்
பஞ்சவன் பாழிவென்ற
அடலே றயில்மன்னன் தெவ்வரைப் போல்மெலிந் தாடவர்கள்
கடலே றியகழி காமம் பெருகிற் கரும்பனையின்
மடலே றுவர்மற்றுஞ் செய்யா தனசெய்வர் மாநிலத்தே’
(79)
|