பக்கம் எண் :
 
இறையனார் அகப்பொருள் - களவு 77
 

           மொழி நடை யெழுதல் அரிதெனக் கிளத்தல்

    ‘அண்ணல் நெடுந்தேர் அரிகே சரியகன் ஞாலமன்னாள்
    வண்ணம் ஒருவா றெழுகினும் மாமணி வார்ந்தனைய
    தண்ணென் கருங்குழல் நாற்றமும் மற்றவள் தன்னடையும்
    பண்ணென் மொழியும் எழுத உளவே படிச்சந்தமே
’       (82)

    ‘களிசேர் களிற்றுக் கழல்நெடு மாறன்கடையல் வென்ற
    தெளிசேர் ஒளிமுத்த வெண்குடை மன்னன்தென் னாடனையாள்
    கிளிசேர் மொழியும் கருங்குழல் நாற்றமுங் கேட்பினைய
    எளிதே எழுத எழுதிப்பின் ஊர்க எழில்மடலே
.’          (83)

    ‘அல்லதூஉம், எழுதுஞான்று இங்ஙனமோ நீர் எழுதுவது?’ என்று  
சொல்லும்; அதற்குச் செய்யுள்:

            
அவயவமெழுதல் அரிதெனக் கிளத்தல்

   ‘விற்றான் எழுதிப் புருவக் கொடியென்றிர்1 தாமரையின்
   முற்றா முகைநீர் எழுதி முலையென்றிர் மொய்யமருட்
   செற்றார் படச்செந் நிலத்தைவென் றான்தென்னன் கூடலன்னாள்
   சொற்றான் எனக்கிள்ளை யோநீர் எழுதத் துணிகின்றதே
.’   (84)

 

     அதுகேட்டுத் தலைமகன் பெயர்த்தும் ஆற்றானாம்; ஆக இனி
இறந்துபடல் ஆகாதென்று, ’நீர் இந்நீரராகன்மின், நுமக்கு இக்குறை
முடித்துத் தருவன்; நும்மாற் கருதப்படுவாள் என்மாட்டுப் பெரிதும்
அருளுடையவ ளாயினாள்’ என்னும்; அதற்குச் செய்யுள்:

                
உடம்பட்டு விலக்கல்

   ஓங்கும் பெரும்புகழ்ச் செங்கோல் உசிதன் உறுகலியை
   நீங்கும் படிவென்ற கோன்வையை வாய்நெடு நீரிடையான்
   தாங்கும் புணையொடு தாங்குதண் பூம்புனல் வாயொழுகின்
   ஆங்கும் வருமன்ன தாலின்ன நாளவள் ஆரருளே
’        (85)

   ‘காடார் கருவரை யுங்கவி வானுங் கடையலன்று
   கூடார் செலச்செற்ற கோன்நெடு மாறன்தென் கூடலன்ன
   ஏடார் மலர்க்குழ லாளெங்கு நிற்பினும் என்னையன்றி
   ஆடாள் புனலுமெல் ஊசலும் ஈதவள் ஆரருளே
’           (86)

   ‘தலைப்புணைக் கொளினே தலைப்புணைக் கொள்ளும்
   கடைப்புணைக் கொளினே கடைப்புணைக் கொள்ளும்
   புணைகை விட்டுப் புனலோ டொழுகின்


  (பாடம்) 1. மென்மரையின்.