பக்கம் எண் :

12தொல்காப்பியம் - உரைவளம்
 

கரணங்கள்  அந்தணர்  முதலிய  நால்வர்க்கே  முதலில் விதிக்கப்பட்டன. கீழோர் தாம் வேண்டியவாறு
ஒழுகுபவராதலின்  கரணம்   அவர்க்கு  இயையாதாயிற்று.  பின்னர்  அவர்க்கும்  நால்வர்க்குப்  புணர்த்த
கரணம்  உரியதாக  வகுத்தனர்.  தொல்காப்பியர்  காலத்து யாவர்க்கும்  கரணம் பொதுவாகவே அமைந்தது.
அதனால் அவர்  கீழோர்க்காகிய  காலமும்  உண்டு  எனத்தங்காலத்துக்கு முன்னரே வகுத்த நிகழ்ச்சிபோல்
கூறினார்.
  

மேலோராகிய     அந்தணர்,  தமக்கேயன்றி  மற்றை  அரசர்  வணிகர்  வேளாளர் ஆகிய மூவர்க்கும்
புணர்த்த  கரணம்  கீழோராகிய  அடியோர் பாங்கு வினைவல பாங்கு  முதலியவர்க்கும்  ஆகிய  காலமும்
உண்டு எனினும் ஆம்.
  

கரணம் வரக் காரணம்
  

143.

பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
ஐயர் யாத்தனர் கரணம் என்ப
(4)
 

பி.இ.நூ.
  

மா.அ. 168
  

மேலோர் கரணமும் கீழோர் கரணமும்
நூலோர்ந் துரைத்த நுண்ணிய மார்க்கம்
வேற்றுமைப்பட விதித்தனர் பொய்யும் வழுவும்
தோற்றிய பின்னர்த் துறவுடையோரே.

  

இளம்
  

என்றது கரணமாகியவாறு உணர்த்துதல் நுதலிற்று
  

(இ-ள்):  பொய்கூறலும்  வழூஉப்பட  ஒழுகலும்  தோன்றிய  பின்னர்  முனிவர்  கரணத்தைக் கட்டினர்
என்று சொல்வர் என்றவாறு.
  

இரண்டும்   தோன்றுவது   இரண்டாம்   ஊழியின்கண்1  ஆதலின்  முதலூழியிற்2  கரணம்  இன்றியே
இல்வாழ்க்கை நடந்தது என்பதூஉம் இவை தோன்றிய பின்னர்க் கரணந்


1,2. இரண்டாம் ஊழி முதல் ஊழி என்பன கால இடைவெளிகளைக் குறிப்பனவாகக் கொள்ளல் நன்று.