பக்கம் எண் :

160தொல்காப்பியம் - உரைவளம்
 

என்பது     உதாரணங்    காட்டுவாரும்  உளர். சீருடைப் பெரும்பொருள் வைத்தவழி மறப்பினும் -
தலைமையுடைய இல்லறத்தைத்  தலைவி  மாட்டு  வைத்த காலத்துத் தலைவன் அறஞ் செயற்கும் பொருள்
செயற்கும் இசையுங் கூத்துமாகிய இன்பம் நுகர்தற்குந்  தலைவியை மறந்து ஒழுகினும்.
  

உதாரணம்
  

“கரும்பினெந்திரங் களிற்றெதிர் பிளிறுந்
தேர்வண் கோமான் றேனூ ரன்னவிவ
ணல்லணி நயந்துநீ துறத்தலிற்
பல்லோரறியப் பசந்தன்று நுதலே”
1

(ஐங்குறு - 55)
  

இதனுள் துறத்தலினெனப் பொதுவாகக் கூறினாள். அற முதலியவற்றைக் கருதுதலின்.
  

அடங்கா     ஒழுக்கத்து அவன் வயின் அழிந்தோளை அடங்கக் காட்டுதற் பொருளின் கண்ணும் -
புறத்து   ஒழுக்கத்தை  உடையனாகிய  தலைவன்  மாட்டு  மனம்  வேறுபட்ட  தலைவியைப்  புறத்து
ஒழுக்கமின்றி நின்மேல் அவர் அன்புடையரென அவ்வேறுபாடு நீங்க நெருங்கிக் கூறுதலையுடைத்தாகிய
பொருளின் கண்ணும்.
  

உதாரணம்:
  

“செந்நெற் செறுவிற் கதிர்கொண்டு கள்வன்
றண்ணக மண்ணளைச் செல்லுமூரற்
கெல்வளை நெகிழச்சாஅ
யல்லலுழப்ப தெவன் கொலன்னாய்”
2
  

(ஐங்குறு - 27)
  

இதன் உள்ளுறையாற் பொருளுணர்க.  


1. பொருள்:   கரும்பு ஆலை களிறுபோலப்  பிளிற்றும்படியான தேர் உடைய வண்மை மிக்க அரசனது
தேனூர் போலும் இவள் நல்ல அழகை  நீ  விரும்பிக்கூடிய பின் பிரிதலின் பலரும் அறியுமாறு இவள்
நுதல் பசந்து காட்டியது.
  

2. பொருள்:  தோழீ! செந்நெல்   வயலில் நண்டானது நெற்கதிர்களைக் கவர்ந்து கொண்டு மண்வளையிற்
புகும்படியான ஊரன்  பொருட்டு  ஒளி  வளையல்  சரிய  மெலிந்து  துன்பம் உழப்பது ஏன்? நண்டு
நெற்கதிர் கொண்டு வளைபுகுதல்  போல்  தலைவன்  தன்  செய்வினை  முடித்து  வருவன் என்பது
உள்ளுறை. இதனால் புறத்தொழுக்கம் இல்லை என்பது பெறப்படும்.