1. மறையின் வந்த மனையோள்-களவொழுக்கம் ஒழுகிப் பின் மணந்து வந்து இல்லறம் நிகழ்த்தும் தலைவி. அவள் செய்வினையாவது தலைவனை வயப்படுத்தி மணந்தது. 2. பொருள்: தோழீ! கைவண்மையுடைய கிள்ளிவளவனது வாளை மீன் வாள்போற் பிறழவும் அதை உண்ணாமல் நீர் நாய் தினமும் உறங்கும்படியான வெண்ணி என்னும் ஊரில் சூழ்ந்த வயலில் உள்ள ஆம்பல் தழையை இடையில் அழகுற அணிந்து இவ்வூர் விழாக்களத்தில் நான் சென்றிருக்க வேண்டும். அது கழிந்தது. இப்போது இங்குள்ள இப்புதியவளை யாணர் ஊரன் காணின் தன்னவளாகக் கொள்ளாது விடுதல் இல்லை. அப்படி அவன் கொள்ளின் முடிப்பன் என்பானது மலையில் உள்ள மூங்கில் போலும் பலமகளிர் தோள்கள் அழகு தொலையும், அவை இரக்கத்தக்கன. (அதனால் இப்போதே சென்று அவனை அவள்பால் செல்லாமல் தடுத்துக் கொள்வேன் எனக் கூறினாள். விழாக்காலத்தில் செல்லாமையால் தலைவி தலைவனை மணந்தாள் என்பது பரத்தை எண்ணம்). |