யார்கொல் வாழி தோழி நெருநை தார்பூண் களிற்றிற் றலைப்புணைதழீஇ புதுவது வந்த காவிரித் தோடுதோய் மலிர்நிறையாடியோரே”1 |
(அகம் - 166) |
எனவரு மிவையும் இளையோர் கூற்று. பிறவும் அன்ன. |
பல்வேறு புதல்வர்க் கண்டு நனி உவப்பினும் - வெவ்வேறாகிய புதல்வரைத் தாங்கண்டு மிக மகிழ்ச்சி செய்யினும் ‘வேறு பல் புதல்வர்’ என்றார் முறையாற் கொண்ட மனைவியர் பலரும் உளராதலின். |
‘ஞாலம் வறந்தீர’ என்னும் மருதக்கலி (82)யுள், |
“அடக்கமில் போழ்தின்கண் தந்தை காமுற்ற தொடக்கத்துத்தாயுழைப் புக்காற் கவளு மருப்புப் பூண்கையுறை யாக வணிந்து பெருமான கைமுகங் காட்டென்பாள் கண்ணீர் சொரிமுத்தங் காழ்சோர்வ போன்றன”2 |
இது முதிர்ந்தாள் உண்ணயந்து கூறியது. |
“மற்றும், வழிமுறைத் தாயுழைப் புக்காற்கவளு மயங்குநோய் தாங்கி மகனெதிர் வந்து முயங்கினண் முத்தின ணோக்கி நினைந்தே நினக்கியாம் யாரே மாகுதுமென்று வனப்புறக் கொள்வன நாடிய ணிந்தனள்”3 |
(கலி - 82) |
1. பொருள்: பக்கம் 182 காண்க. 2-4. பொருள்: தந்தையானவன் அறநெறிக்கு அடங்கி யொழுகுதல் இல்லாத இளமைக் காலத்தே தான் காமுற்றுக் கொண்ட முதல் காமக்கிழத்தியிடம் புகுந்த புதல்வனுக்கு, அவள். தந்தத்தாலாகிய பூண்களைக் கையுறையாக அணிந்து, பெருமானே! நின்ஒளி முகத்தை முத்தமிட எனக்குக் காட்டு என்று சொல்லிச் சிந்திய கண்ணீர்த் துளிகள் மாலையினின்றும் முத்துகள் உதிர்வனபோல் இருந்தன. (-இதில் உள்ள கூற்று தொடக்கத்துத் தாய் என்றதனால் முதிர்ந்ததாயின் கூற்று எனக் கொள்க.) அடுத்து வழிமுறைத்தாயிடம் புதல்வன் புகுந்தான். அவள் தன் காமநோயைத் தாங்கி மகன் எதிரே வந்து |