பக்கம் எண் :

4தொல்காப்பியம் - உரைவளம்
 

தலைமகன்  கற்பித்தலானுங்   கற்பாயிற்று.   இனித்   தலைவனும்  களவின்  கண்  ஓரையும்  நாளுந்
தீதென்று    அதனைத்    துறந்தொழுகினாற்    போல    ஒழுகாது   ஓத்தினுங்    கரணத்தினும்யாத்த
சிறப்பிலக்கணங்களைக்  கற்பித்துக்  கொண்டு  துறவறத்திற்  செல்லுந் துணையும்  இல்லற  நிகழ்த்துதலிற்
கற்பாயிற்று.  களவு  வெளிப்பட்ட  பின்னராயினும்   அது   வெளிப்படாமையாயினும்   உள்ளப்புணர்ச்சி
நிகழ்ந்த   வழியாயினும்   வரைதல்  அக்களவின்   வழியாதலின்   மேலதனோடு  இயைபுடைத்தாயிற்று.
இச்சூத்திரம் கற்பிற்கு எல்லாம் பொதுவிலக்கணங் கூறுகின்றது.
  

இதன்   பொருள்-கற்பு எனப்படுவது-கற்பென்று சிறப்பித்துக் கூறப்படுவது, கரணமொடுபுணர-வேள்விச்
சடங்கோடே   கூட,
1  கொளற்கு   உரி  மரபிற்கிழவன்-ஒத்த  குலத்தோனும்  மிக்க  குலத்தோனுமாகிக்
கொள்ளுதற்குரிய    முறைமையினையுடைய    தலைவன்,   கிழத்தியை- ஒத்த   குலத்தாளும்   இழிந்த
குலத்தாளுமாகிய     தலைவியை,    கொடைக்கு    உரி    மரபினோர்    கொடுப்ப -கொடுத்தற்குரிய
முறைமையினையுடைய இருமுது குரவர் முதலாயினர் கொடுப்ப, கொள்வது-கோடற்றொழில் என்றவாறு.
  

‘எனப்படுவது’    என்னும்  பெயர்  ‘கொள்வது’  என்னும்  பெயர்ப்   பயனிலை2  கொண்டது.  இது
சிறப்புணர்த்துதல்   அவ்வச்சொல்லிற்கு’   (தொல்.  சொல்.  297)   என்னும்    சூத்திரத்துட்  கூறினாம்.
‘கொடுப்போரின்றியும்’  (143) என மேல்வருகின்ற தாகலின் இக்கற்புச் சிறத்தலிற்  சிறந்ததென்றார்.  இஃது
‘என’  என்கின்ற  எச்சமாதலிற்  சொல்லளவே  எஞ்சி  நின்றது.  இதனாற் கரணம்  பிழைக்கில்  மரணம்
பயக்கும்,  என்றார்.  அத்தொழிலின்  நிகழுங்கால்  இவளை  இன்னவாறு  பாதுகாப்பாயெனவும்  இவற்கு
இன்னவாறே   நீ   குற்றேவல்  செய்தொழுகெனவும்  அங்கியங்கடவுள்  அறிகரியாக    மந்திரவகையாற்
கற்பிக்கப்படுதலின் அத்தொழிலைக் கற்பென்றார். தலைவன் பாதுகாவாது பரத்தைமை செய்து ஒழுகினும்


1. வேள்விச் சடங்கு-திருமணச் சடங்கு.

2. கொள்வது  என்பது கொள்ளுதல்  எனும் பொருளுடைய தொழிற் பெயராம். அது கொண்டு ஒழுகும்
ஒழுக்கத்தைக் குறிக்கும்.