தொல்காப்பியம் - பொருளதிகாரம்
உரைவளம்
கற்பியல்
கற்பு
140.
பிற்கால இலக்கண நூல்கள்
நம்பி அகப்பொருள் 171
வரைவு எனப்படுவது உரவோன் கிழத்தியைக் குரவர் முதலோர் கொடுப்பவும் கொடாமையும் கரணமொடு புணரக் கடியயர்ந்து கொளலே.
இலக்கண விளக்கம் 528
மாறன் அகப்பொருள் 63
வரைவு எனப்படுவது புரைதீர் கிழவோன் உரைமலி கற்பின் உத்தமக் கிழத்தியைத் தந்தையாய் மாதுலன் தம்முன் தமரொடும் முந்திய ஆசான் முதலோர் கொடுப்பக் கரணம் வழுவாது கடியயர்ந்து கொளலே.