இதனானே இயற்கைப் புணர்ச்சிக்கண் மெய்யுறு புணர்ச்சியையும் உள்ளப் புணர்ச்சியென்று கூறி அதன் வழிக் கற்பு நிகழ்ந்த தென்றுங் கூறவும் படும். இவ்வாசிரியர் ஆதியூழியின் அந்தத்தே இந்நூல் செய்தலின் முதனூலாசிரியர் கூறியவாறே களவு நிகழ்ந்த பின்னர்க் கற்பு நிகழுமாறுங் கூறித் தாம் நூல் செய்கின்ற காலத்துப் பொய்யும் வழுவும் பற்றி இருடிகள் கரணம் யாத்தவாறுங் கூறினார். அக்களவின் வழி நிகழ்ந்த கற்புங் கோடற்கென்று உணர்க. |