பக்கம் எண் :

158தொல்காப்பியம் - உரைவளம்
 

கரியமாகிய காலைப்
பெரிய நோன்றனிர் நோகோயானே”
1

(குறுந்-178)
  

இதனுண்   முலையிடைக்கிடந்தும் பனிக்கின்ற நீர் அரியமாகிய காலத்து எங்ஙனம் ஆற்றினீரென யான்
நோவா   நின்றேன்.   இங்ஙனம் அருமை செய்தலால் தேற்றுதற்கு உரியேனாகிய என்னைச் சிறப்பித்துக்
கூறல் ஆகாது என்றவாறு காண்க.
  

“பொங்குதிரை பொருத வார்மணலடைகரைப்
புன்காய் நாவற் புகர்புற விருங்கனி
கிளைசெத்து மொய்த்த தும்பி பழஞ்செத்துப்
பல்காலலவன் கொண்ட கோட்கூர்ந்து
கொள்ளா நரம்பினிமிரும் பூச
லிரைதேர் நாரை யெய்திய விடுக்குந்
துறைகெழு மரந்தை யன்ன விவணலம்
பண்டுமிற்றே கண்டிசிற் றெய்ய
வுழையிற் போகா தளிப்பினுஞ்சிறிய
நெகிழ்ந்த கவிழ்நலங் கொள்ளே மகிழ்ந்தோர்
கட்களி செருக்கத் தன்ன
காமங் கொல்லிவள் கண்பசந் ததுவே”
2  

(நற்றிணை-35)
   

இதனுள்    தலைவி கனியாகவும், தும்பி தோழியாகவும் அலவன் தன்மேல்  தவறிழைக்குந் தமராகவும்,
தலைவன்  இரைதேர் நாரையாகவும் உள்ளுறையுவமங் கொள்வுழித் தலைவி  பொருட்டு யாய்க்கு  அஞ்சி
யொழுகினேன்  நீ  காத்ததன்றி யான் ஆற்றுவித்தது உளதோவெனத்  தலைவன் சிறப்பிற்கு எதிர் தோழி
கூறியவாறு காண்க. ‘பண்டும் இற்றே’ என்றது பண்டையின் மிகவும்  வருந்தினாளென்றாள். இவன்  கண்
நீண்டு   பசந்தது.  களவின்கண்  நீங்காது  அளியா  நிற்கவுஞ்   சிறிது  கெட்ட  அழகின்   மிகுதியோ,
கள்ளுண்டார்க்குக் கள்அறூஉங் காலத்துப் பிறந்த வேறுபாடு  போலுங் காம வேறுபாடோ, அவ்விரண்டும்
அல்லவே,  இஃது ஓர் அமளிக் கண் துயிலப் பெற்றும் வேதவிதி   பற்றிக் கூட்டம் நிகழாமையாற் பிறந்த
மிக்க வேறுபாடன்றோ?
  


1. பொருள்: பக்கம் 142ல் காண்க.  

2. பொருள்: பக்கம் 145ல் காண்க.