பக்கம் எண் :

164தொல்காப்பியம் - உரைவளம்
 

இதனுள் கொள்வரார்ப்பினும் பெரிதெனவே நாண் நீங்கிப் புலப்படுத்தலை மகிழ்ந்தவாறு காண்க.
  

சிறந்த   புதல்வனை  நேராது  புலம்பினும்  -  யாரினுஞ்  சிறந்த  புதல்வனை  வாயிலாகக்  கொண்டு
சென்றுழி அவற்குந் தலைவி வாயில் நேராமல் தலைவன் வருந்தினும்.
  

உதாரணம்:
  

“பொன்னொடு குயின்ற பன்மணித்தாலித்
தன்மார்பு நனைப்பத்தன்றலையுமிஃதோ
மணித்தகைச் சாந்தம் புலர்தொறுநனைப்பக்
காணாயாகலோ கொடிதே கடிமனைச்
சேணிகந்தொதுங்கு மாணிழையரிவை
நீயிவணேராவாயிற்கு நாணுந்
தந்தையொடுவருவோன்போல
மைந்தனொடு புகுந்த மகிழ்நன்மார்பே”
  

மாண்நலம்   தா  என  வகுத்தற்  கண்ணும்  -  இவள்  இழந்த  மாட்சிமைப்பட்ட  நலத்தைத்  தந்து
இகப்பினும் இகப்பாயெனத் தலைவனை வேறுபடுத்தற்கண்ணும்.
  

உதாரணம்:
  

“யாரை யெலுவ யாரே நீயெமக்
கியாரையு மல்லை நொதுமலாளனை
யனைத்தாற் கொண்க வெம்மிடையே நினைப்பில்
கடும்பகட் டியானை நெடுந்தேர்க்குட்டுவன்
வேந்தடுமமயத்து முரசதிர்ந்தன்ன
வோங்கற் புணரி பாய்ந்தாடு மகளி
ரணைந்திடுபல்பூ மரீஇயாங்கு
வாபுலம் புகுதரு பேரிசைமாலைக்
கடல்கெழு மரந்தையன்னவெம்
வேட்டனையல்லையா னலந்தந்து சென்மே”
1

(நற் - 395)
  

எனவரும்.  


1. பொருள்  ; எலுவ!   யார்   நீ! நீ எமக்கு என்ன உறவு? யாதோர் உறவும் இல்லை; நொதுமலன் நீ.
அவ்வளவே நம்மிடையேயுள்ள  உறவு. குட்டுவனின் போரில் எழும் முரசு போல ஒலியுண்டாக மலைச்
சுனையில் பாய்ந்து