பக்கம் எண் :

176தொல்காப்பியம் - உரைவளம்
 

தூது விட்டது வந்துழிக் காண்க.
  

“பதுக்கைத் தாய வொதுக்கருங் கவலைச்
சிறுகண் யானை யுறுபகை நினையா
தியாங்கு வந்தனையோ பூந்தார் மார்ப
வருள்புரி நெஞ்ச முய்த்தர
விருள்பொர நின்ற விரவினானே”
1  

(ஐங்குறு - 362)
    

இது, சேணிடைப்பிரிந்து இரவின்வந்துழிக் கூறியது.
  

“ஆமா சிலைக்கு மணிவரை யாரிடை
யேமாண் சிலையார்க்கினமா விரிந்தோடுந்
தாமாண்பில் வெஞ்சுரஞ் சென்றார் வரக்கண்டு
வாய்மாண்ட பல்லி படும்.”
2  

(கைந்நிலை - 18)
   

இது, நிமித்தங் காட்டிக் கூறியது.
  

இன்னும்  அதனானே  நமர்  பொருள்  வேண்டுமென்றார்.  அதற்கு யான் அஞ்சினேனெனக் களவின்
நிகழ்ந்ததனைக் கற்பில் தலைவிக்குக் கூறுதலுங் கொள்க.
  

“கன்னவி றோளான் கடிநாள் விலக்குதற்
கென்னை பொருணினைந்தா ரேந்திழாய் - பின்ன
ரமரேற்றுக் கொள்ளு மென்றஞ்சினே னஞ்சார்
நமரேற்றுக் கொள்ளாத ஞான்று.”
3
  

இன்னுந் தோழி கூற்றாய்ப் பிறவற்றான் வருவனவெல்லாம் இதனான் அமைக்க.


1. பொருள்: பூந்தார்  மார்ப!   கற்குவியல்களையுடையதாகிய  செல்லுதற்கரிய   கவர்த்த வழியில் சிறிய
கண்ணையுடைய யானையாகிய பகையைக் கருதாமல் எம்மிடத்து அருள்மிக்க மனது  செலுத்த இருட்டு
மிகத்தாக்கும் இரவில் எவ்வாறு தந்தாய்!

2. பொருள்: பக்கம் 156 - 157ல் காண்க 

3. பொருள் : தோழீ!  கற்போலும்  தோளானாகிய தலைவனுடன் நம் திருமண நாளை விலக்குவதற்காக
என்ன காரணம் கருதினரோ தெரியவில்லை. அவர் மறுத்த பின்னர் தலைவரை நமர் ஏற்றுக் கொள்ளாத
நாளில் தலைவர் அமர் ஏற்று வருவாரோ என அஞ்சினேன்.