1. மூவகையார் - காமக் கிழத்தியர் மூவகையார். 2. இல்லோர் - இல்வாழ்க்கையினராகிய தலைவனும் தலைவியும், செய்வினை - ஊடல் கூடல் முதலியன. 3. பன்மையான்-இல்லோன் என்றோ இல்லோள் என்றோ கூறாது ‘இல்லோர்’ என்று பன்மையாற் கூறியதனால். 4. பொருள்: வயல் வரம்பில் உள்ள மாமரத்தின் முதிர்ந்து வீழும் பழத்தைப் பழனத்தில் உள்ள வாளை மீன் கவரும் படியான ஊரனானவன் எம் வீட்டில் எம்மைப் பெருமைப்படுத்தும் மொழிகளைக் கூறித் தம் வீட்டில் முன் நிற்பார் கையும் காலும் தூக்கத் தானும் தூக்கும் கண்ணாடியிற் றோன்றும் பாவைபோலத் தன் புதல்வனுக்குத் தாயாகிய அவள் விருப்பப்படியே அவள் விரும்பியவற்றைச் செய்து ஒழுகுவானாயினான். |